பொங்கலோ பொங்கல் என ஓடி வரும் Oppo: பட்ஜெட் விலை 5ஜி போன் உறுதி!

|

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. Oppo A78 5G ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என புதிய கசிவு தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக இருக்கிறது.

Oppo A78 5G

Oppo A78 5G

Oppo நிறுவனம் தனது அடுத்த போனை Oppo A சீரிஸ் இல் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சீன உற்பத்தியாளரான ஒப்போ நிறுவனம் Oppo A78 5G என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 14 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. Oppo A78 5G ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A77 5Gக்கு அடுத்து மாடலாக அறிமுகமாக இருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி

Appuals அறிக்கையின்படி, Oppo A78 5G இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 14 ஆம் தேதி அதாவது பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த போனின் விலை, வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் குறித்த கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

ஒப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. Oppo A78 5G ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இதில் 6.6 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

50 எம்பி முதன்மை சென்சார்

50 எம்பி முதன்மை சென்சார்

Oppo A78 5G ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனவும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13.0 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் விலை

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் விலை

Oppo A78 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.18,500 முதல் ரூ.19,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் உறுதி செய்யவில்லை. அதிகாரப்பூர்வ அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oppo A77 5G அம்சங்கள்

Oppo A77 5G அம்சங்கள்

Oppo நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் A77 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஒப்போ ஏ77 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.56 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். 720x1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் 810 பிராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் மீடியாடெக் 810 பிராசஸர் என்பதால் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போன் 48எ ம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதற்குப் பதிலாக 64 எம்பி ரியர் கேமரா இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஸ்மார்ட்போன். இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A78 5G smartphone Might to be launched on Pongal day: Budget price 5G phone confirmed!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X