ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

|

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.6499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஆனது "தாறுமாறாக" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா அல்லது இதில் ஏதேனும் குறைகள் உள்ளதா? இந்த ஸ்மார்ட்போன், எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது? இதோ விவரங்கள்:

இது எந்த பிராண்ட்டின் ஸ்மார்ட்போன்?

இது எந்த பிராண்ட்டின் ஸ்மார்ட்போன்?

இந்தியாவில் வெறும்ம் ரூ.6499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் - போக்கோ சி50 (POCO C50) மாடல் ஆகும்.

இது கடந்த ஆண்டு உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி40 (Poco C40) ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும்!

2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!

விலையை மீறிய சில முக்கிய அம்சங்கள்!

விலையை மீறிய சில முக்கிய அம்சங்கள்!

போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது விலையை மீறிய சில முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது என்றே கூறலாம்!

ஏனென்றால், இது ஒரு பெரிய எச்டி+ டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா செட்டப், ஒரு பெரிய பேட்டரி மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவைகளை கொண்டுள்ளது.

மொத்தம் 2 ஸ்டோரேஜ்களின் கீழ் வாங்க கிடைக்கிறது!

மொத்தம் 2 ஸ்டோரேஜ்களின் கீழ் வாங்க கிடைக்கிறது!

போக்கோ C50 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 3ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற இரண்டு ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவைகளின் விலை நிர்ணயம் முறையே ரூ.6,499 மற்றும் ரூ.7,299 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கண்ட்ரி கிரீன் (Country Green) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்?

எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்?

போக்கோ சி50 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வருகிற ஜனவரி 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் மீது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு EMI விருப்பங்கள் அணுக கிடைக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1 வருட வாரண்டியை பெற்றுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் இன்-பாக்ஸ் ஆக்சஸெரீஸுக்கு 6 மாத வாரண்டி கிடைக்கும்!

போக்கோ C50-யின் டிஸ்பிளே:

போக்கோ C50-யின் டிஸ்பிளே:

டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ சி50 ஸ்மார்ட்போனில், வாட்டர் டிராப் நாட்ச் டிசைனின் கீழ் 6.52 இன்ச் அளவிலான டிஸ்பிளே உள்ளது.

இந்த டிஸ்பிளே HD+ ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

போக்கோ சி50 ஸ்மார்ட்போனின் கேமராக்களை பற்றி பேசும் முன், அதன் 'லெதர் போன்ற" டிசைனை குறிப்பிட விரும்புகிறோம். இது நிச்சயம் ஒரு நல்ல பிடிமானத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 8MP மெயின் கேமரா + இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில்,5MP செல்பீ கேமரா உள்ளது.

போக்கோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் ஆனது 30fps என்கிற வேகத்தின் கீழ் 1080p வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவைகள் ஆகும்.

என்ன ப்ராசஸர், என்ன பேட்டரி?

என்ன ப்ராசஸர், என்ன பேட்டரி?

போக்கோ சி50 ஆனது மீடியாடெக் ஹீலியோ ஏ22 (MediaTek Helio A22) சிப்செட்டை பேக் செய்கிறது. இது 3GB வரையிலான ரேம் மற்றும் 32GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் வழங்குகிறது.

ஒருவேளை உங்களுக்கு கூடுதல் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், உங்களுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றும் கிடைக்கும். அதை பயன்படுத்தி 512ஜிபி வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம்!

பேட்டரியை பொறுத்தவரை, இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், யூஎஸ்பி டைப்-சி போர்ட் 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது!

2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு சின்ன குறை உள்ளது!

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு சின்ன குறை உள்ளது!

போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால் - இது "முழுக்க முழுக்க" ரெட்மி ஏ1 பிளஸ் (Redmi A1+) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆகும்.

அதாவது இது ஏற்கனவே அறிமுகமாகிய ரெட்மி ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்தையும் போக்கோ பிராண்டிங்கின் கீழ் கொடுக்கிறது. இந்த சின்ன குறையை தவிர்த்து, ரூ.6499-க்கு வாங்க கிடைக்கும் போக்கோ சி50 ஸ்மார்ட்போனில் வேறு குறையும் கண்டுபிடிக்க முடியாது!

Photo Courtesy: POCO / Flipkart

Best Mobiles in India

English summary
Not For Rs 10000 POCO C50 Launched For Just Rs 6499 Flipkart Sale Starts From January 10 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X