Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. 6720mAh பேட்டரி.. ஆபரில் Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி (Motorola G86 Power 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 6720mAh பேட்டரி, 50 எம்பி கேமரா மற்றும் ஐபி69 ரேட்டிங் மட்டுமல்லாமல், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்டை கொடுத்து உள்ளது. இந்த போனுக்கு கிடைக்கும் அம்சங்கள் மற்றும் தள்ளுபடியை இப்போது பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 10 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.17,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.900 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,099 விலைக்கு இந்த மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

பவர் மாடலாக இருப்பதால், 54 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 6720mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்காதபடி 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. முழு பீச்சர்களிலும் மிரளவிடுகிறது.

மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி (Motorola G86 Power 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. மேலும், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (Octa Core 4nm MediaTek Dimensity 7400) சிப்செட்டை கொடுத்து உள்ளது.

மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் லீடிங் கேமரா சென்சாரான சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) உள்ளது.

மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. மேக்ரோ ஆப்ஷன் கொண்ட மாடலாக இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 54 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 6720mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.65 எம்எம் தடிமன் வருகிறது. இருப்பினும், 198 கிராம் எடை கொடுத்து உள்ளது. பிரீமியம் லெவல் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது. MIL-STD 810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. டூயல் மைக்ரோபோன்களை கொடுத்து உள்ளது. பான்டோன் காஸ்மிக் ஸ்கை (PANTONE Cosmic Sky), பான்டோன் கோல்டன் சைப்ரஸ் (PANTONE Golden Cypress) மற்றும் பான்டோன் ஸ்பெல்பவுண்ட் (PANTONE Spellbound) ஆகிய கலர்களில் இந்த மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola G86 Power 5G With 8GB RAM Available At 10 Percent Discount on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X