மார்ச் 30 குறிச்சாச்சு.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 6600mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) மற்றும் விவோ பேட்6 ப்ரோ (Vivo Pad6 Pro) மாடல்களும் வெளியாக இருக்கின்றன.
டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கொண்ட மாடல்களாக விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிஎஸ்எல்ஆர் கேமராவை போல மல்டிபிள் போகல் லென்த் கொண்ட லென்ஸ்களை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். இதற்காக 200 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொண்டுள்ளது.

ஏற்கனவே, ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் உள்ளது. இப்போது, டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. வருகிற மார்ச் 30ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்களுடன் விவோ பேட்6 ப்ரோ அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X300 Ultra Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஇ பிளாட் டிஸ்பிளேவுக்கு 2K+ ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.
200 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 901 சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி) மற்றும் 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (எச்பிபி சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி) கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (சோனி எல்ஒய்டி818 சென்சார்) கிடைக்கிறது.
இதுபோக 5 எம்பி பிரைமரி கலர் லென்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 6600mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன. இதில் சாட்டிலைட் கம்யூனிகேஷன் மாடலும் உள்ளது.
விவோ எக்ஸ்300எஸ் அம்சங்கள் (Vivo X300s Specifications): 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K+ ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்து. 7100mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்செட் உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்க உள்ளது.
விவோ பேட்6 ப்ரோ அம்சங்கள் (Vivo Pad6 Pro Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை கொடுத்து உள்ளது. 13.2 இன்ச் 4K டிஸ்பிளே, 13000mAh+ பேட்டரி கிடைக்க உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி உள்ளது.


Click it and Unblock the Notifications








