சத்தமின்றி சர்ப்ரைஸ் கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 16 OS அப்டேட்.. எந்த போனுக்கு தெரியுமா?
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 16 அப்டேட் (Android 16 OS Update) வழங்கப்படுகிறது. அதாவது Ytechb வெளியிட்ட தகவலின்படி, W1UI36H.39-17 என்ற ஃபார்ம்வேர் வெர்ஷன் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ பயனர்களுக்குத் தான் இந்த புதிய அப்டேட் கிடைக்கத் தொடங்கி உள்ளது. விரைவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த போனுக்கு ஐந்து ஓஎஸ் அப்டேட்கள் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே ஆண்ட்ராய்டு 19 ஒஎஸ் வரை இந்த போனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். அதேபோல் 4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








