கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது! 7500mAh பேட்டரி, மேக்னடிக் கூலர், வயர்லெஸ் சார்ஜர்! புது OnePlus மினி போன்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலை வருகிற மார்ச் 24 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து (சில வாரங்களில் அல்லது மாதங்களில்) இதே மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனமானது, புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் உடன் அறிமுகமாகும் மூன்று புதிய ஆக்சஸெரீஸ்களை (Accessories) அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தி உள்ளது. இவற்றில் மேக்னட்டிக் கூலிங் ஃபேன்கள் (Magnetic cooling fans) மற்றும் ஒரு வயர்லெஸ் சார்ஜர் (Wireless charger) அடங்கும்.

ஒன்பிளஸ் அதன் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து, 9.8 மிமீ தடிமன் மற்றும் 68 கிராம் எடை கொண்ட 'மேக்னடிக் ஐஸ் கார்டு ஸ்லிம் கூலர்' (Magnetic Ice Card Slim Cooler) ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறது. இதுவொரு ஸ்லிம் ஆன ஆக்சஸெரீயாகும். இதில் உள்ள மேக்னட்டிக் சப்போர்ட் உள்ளதால், கேம் விளையாடும்போது போனின் பின்புறத்தில் ஒட்டிக்கொள்ள முடியும். இது தட்டையான வடிவமைப்பை கொண்டிருப்பதால், பிடித்து கொண்டு பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.
ஒன்பிளஸ் 40W சூப்பர் ஐஸ் பாயிண்ட் மேக்னடிக் கூலர் (OnePlus 40W Super Ice Point Magnetic Cooler) ஆனது சிஸ்டம்களில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய கூலிங் ஃபேனை போல் தோற்றமளிக்கிறது. இது மேலிருந்தும், கீழிருந்தும் வரும் காற்றோட்டத்துடன் குறைந்த சத்தத்தை உருவாக்கும் என்றும், நான்கு நிலைகளில் சரிசெய்யும் வசதியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடைசியாக 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜர் (50W AIRVOOC wireless charger) உள்ளது. இது பில்ட் -இன் ஸ்டாண்டுடன் கூடிய வட்ட வடிவ டிசைனை கொண்டுள்ளது. இது, நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜரின் மீது வைக்கும்போது, ஸ்மார்ட்ஃபோனை தாங்கிப் பிடித்துக்கொள்ள உதவுகிறது. இதன்மூலம், பயன்படுத்தும் நேரத்தில் ஒரு ஸ்டாண்டாகவும் செயல்படும். இந்த மூன்று தயாரிப்புகளுமே சீனாவில் உள்ள ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் முன்பதிவு செய்ய கிடைக்கிறது
OPINION - இந்த 3 ஆக்சஸெரீஸ்களும் ஒன்பிளஸ் 15எஸ் சேர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா? இந்த 3 ஆக்சஸெரீஸ்களும் சீனாவிற்கு வெளியே அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், அப்படி கிடைத்தால், கூலிங் ஃபேன் ஆக்சஸரீகள் தேவைப்படும் பவர் யூசர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒன்பிளஸ் 15எஸ் மாடலை மனதில் வைத்து சீனாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் மீது ஒரு கண் வைக்கலாமா? கண்டிப்பாக! ஏனென்றால் இது ஸ்மால் ஸ்க்ரீன் கொண்ட ஒரு பவர்புல் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 7,500mAh பேட்டரி, 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மற்றும் பைபாஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவைகள் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அளவிலான பேட்டரி கெப்பாசிட்டி ஆனது ஒரு பிளாக்ஷிப் மாடலுக்கு உண்மையிலேயே பெரிய கெப்பாசிட்டி ஆகும். மேலும் "மினி ஸ்மார்ட்போன்" பிரிவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கெப்பாசிட்டியும் இதுவாகும். எனவே, காம்பாக்ட் சைஸில் இருந்தாலும், பேட்டரி லைஃப் ஆனது "சமரசம்" செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்களில் 165FPS ஆதரவுடன் 165Hz டிஸ்பிளேவை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே கேம்களை விளையாடும்போது ஏற்படும் மோசமான நெட்வொர்க் இணைப்பு சிக்கல்களை சரிசெய்ய, இதில் Esports Tri-Core மற்றும் Esports Network Chip G2 ஆகியவைகள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக கேமிங் பெர்ஃபார்மென்ஸ் "கிட்டத்தட்ட" பெரிய குறைகளை சந்திக்காமல் போகலாம்.


Click it and Unblock the Notifications








