Home
Mobile

1 கல்லுல 2 மாங்காய்.. ஒரே நாளில் 2 புது Samsung 5G போன்கள் அறிமுகம்.. என்ன மாடல்கள்? என்ன விலை?

சாம்சங் (Samsung) நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி அன்று, ஒரே நாளில் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி (Galaxy A37 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Galaxy A57 5G) மாடல்கள் ஆகும்.

அறிமுகத்திற்கு முன்னதாக, இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களும் லீக் ஆகியுள்ளன. வெளியான விவரங்களின்படி 2 புதிய மாடல்களும் பழைய (கேலக்ஸி ஏ36 மற்றும் கேலக்ஸி ஏ56) மாடல்களுடன் ஒப்பிடுகையில் அதிக விலைக்கு வரும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

1 கல்லுல 2 மாங்காய்.. ஒரே நாளில் 2 புது Samsung 5G போன்கள் அறிமுகம்!

விலை: மை நுயென் டிவி (Mai Nguyen TV) யூட்யூப் சேனல் பகிர்ந்த ஒரு லேட்டஸ்ட் வீடியோவின் படி, 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி மாடலின் விலை ஆனது, வியட்நாமில் VND 10,990,000 (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,000) ஆக இருக்கலாம் என்கிறது.

இதேபோல, அதே 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி மாடலின் விலையானது, வியட்நாமில் VND 12,490,000 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.44,000) ஆக இருக்கலாம் என்கிறது. இந்த தகவல்கள் உள்ளூர் (வியட்நாம்) விலை நிர்ணயத்தின் அடிப்படையில் அமைந்தவை; மற்ற சந்தைகளுக்கு வரும் போது இவைகள் மாறுபட வாய்ப்புள்ளது.

கலர் ஆப்ஷன்கள்: கேலக்ஸி ஏ57 மாடலானது சார்கோல், ஐசி ப்ளூ, கிரே, லிலாக் மற்றும் நேவி ஆகிய 4 கலர்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் ஆனது ஒயிட், சார்கோல், கிரேக்ரீன், லாவெண்டர் மற்றும் நேவி ஆகிய 4 கலர்களில் வெளியாகலாம். மேற்கண்ட அனைத்து கலர் ஆப்ஷன்களுமே சாம்சங்கின் 'ஆசம்' (Awesome) பிராண்டிங்கை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முக்கிய அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ37 5ஜி மாடல் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது சாம்சங்கின் எக்ஸினோஸ் 1480 சிப் உடன் இயக்கப்படலாம்.

கேமரா செட்டப்பில் 50எம்பி ப்ரைமரி சென்சார், கூடுதலாக 8எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 5எம்பி மேக்ரோ லென்ஸ்கள் இடம்பெறலாம். முன்பக்கத்தில், 12எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை, 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். கடைசியாக சாஃப்ட்வேரை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 8.5-இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்மார்ட்பிரிக்ஸ் வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ37 மற்றும் கேலக்ஸி ஏ57 ஆகிய இரண்டுமே வெளியாகும் பிராந்தியத்தை பொறுத்து சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் அல்லது சாம்சங்கின் இன்டர்னல் ஐசோசெல் எஸ்5கேஜிஎன்ஜே சென்சாரை உள்ளடக்கிய புதிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம்.

இந்த இரண்டு சென்சார்களும் லார்ஜர் 1/1.56-இன்ச் ஆப்டிகல் ஃபார்மெட்டை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது பழைய கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போனில் உள்ள 1/1.95-இன்ச் சென்சாரிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும். ஒரு லார்ஜர் சென்சார் அதிக ஒளி உட்கொள்ளலை அனுமதிக்கிறது, இது டைனமிக் ரேன்ஜ், குறைந்த-ஒளி செயல்திறன் மற்றும் படத் தெளிவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OPINION: பழைய கேலக்ஸி ஏ36 5ஜி மாடலுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன்ஒரு நல்ல மேம்படுத்தலாகவே தெரிகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் "சரியான முறையில்", "போட்டித்தன்மை மிகுந்தபடி" அமைக்கப்பட்டால் - இது சாம்சங் பிராண்டிங்கை தேடித்தேடி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு நம்பகமான மிட்-ரேன்ஜ் ஆப்ஷனாக மாறலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Samsung 5G Phones Launching On March 25 Galaxy A37 Galaxy A57 Price Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X