Home
Mobile

வெளுத்து கட்டும் விற்பனை.. வெறும் ரூ.10,749 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?

நம்ப முடியாத பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக் கொடுக்கும்படியான ஸ்மார்ட்போன்களை லாவா மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதில் 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 128 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் லாவா பிளேஸ் டிராகன் 5ஜி (Lava Blaze Dragon 5G) வெளிவந்தது. பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடியுடன் விற்பனையில் வரவேற்பு பெற்று வருகிறது.

குளோசி கேமரா பம்ப் மற்றும் பேக் பேனல் டிசைனில் கோல்டன் மிஸ்ட் (Golden Mist) மற்றும் மிட்நைட் மிஸ்ட் (Midnight Mist) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 9.05 எம்எம் தடிமன் வருகிறது. 210 கிராம் எடை கொடுத்து உள்ளது. இப்போது, அமேசான் தளத்தில் 4 சதவீத தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

வெளுத்து கட்டும் விற்பனை.. வெறும் ரூ.10,749 போதும்.. 50MP கேமரா!

கூடுதலாக பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது, 4 சதவீத தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ரூ.11,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன ரூ.10,749 விலைக்கு இந்த பிளேஸ் டிராகன் 5ஜி மாடலை வாங்கி கொள்ளலாம்.

லாவா பிளேஸ் டிராகன் 5ஜி அம்சங்கள் (Lava Blaze Dragon 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி கொண்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த விலைக்கு ஓஎஸ் அப்டேட் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது. கூடுதலாக 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. யுனிசோக் சிப்செட் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் ஸ்னாப்டிராகன் வருகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா பிளேஸ் டிராகன் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் பியூட்டி மோட் (Beauty Mode) உள்ளிட்ட சில கேமரா பீச்சர்களையும் கொடுத்து உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), வை-பை 801 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) உள்ளது. இந்த விலைக்கு ஏற்ப சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) பேக் செய்யப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Dragon 5G With 128GB Storage Available At 4 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X