வச்சான் பருங்க Vivo.. ரூ.14,999 போதும்.. 6500mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. IP65 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடல்களான விவோ ஒய்21 5ஜி (Vivo Y21 5G) மற்றும் விவோ ஒய்11 5ஜி (Vivo Y11 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, பேட்டரி, கேமரா, சிப்செட் உள்ளிட்ட முழு பீச்சர்களும் கசிந்தன. இப்போது, ரேம், மெமரி மற்றும் கலர் விவரங்களுக்கு விலை விவரங்கள் தெரியவந்துள்ளன.
குளோபல் மார்கெட்டில் விவோ ஒய்21 5ஜி மற்றும் விவோ ஒய்11 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இப்போது, இந்திய உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கின்றன. ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் விலை விவரங்கள் டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் வழியாக கசிந்துள்ளது.

இதில் ரேம், மெமரி மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் தெரிய வந்துள்ளன. அதேபோல அந்த வேரியண்ட்களில் விலை விவரங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் மலிவான விலைக்கு கிடைக்க இருக்கிறது. விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,499 பட்ஜெட்டில் இருக்கப் போகிறது.
விவோ ஒய்21 5ஜி விலை
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,499 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,499 ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.22,499 ஆக இருக்கிறது. ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) மற்றும் மிட்நைட் ப்ளூ (Midnight Blue) கலர்களில் கிடைக்க உள்ளது.
விவோ ஒய்11 5ஜி விலை
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆகவும் இருக்கிறது. மிட்நைட் ப்ளூ (Midnight Blue) மற்றும் சன்சைன் கோல்டு (Sunshine Gold) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. ஆகவே, இதில் 2 வேரியண்ட்கள் மட்டுமே கிடைக்க உள்ளன. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ ஒய்21 5ஜி அம்சங்கள்
120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்க உள்ளது. 6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொடுக்க உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. கியூவிஜிஏ கேமராவும் உள்ளது. 5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்க உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்டை கொடுத்து உள்ளது.
6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்து உள்ளது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க உள்ளது. இதே பீச்சர்கள் கிட்டத்தட்ட விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போனிலும் கிடைக்கிறது. சிறிய மாறுதல்கள் மட்டும் உள்ளன.
விவோ ஒய்11 5ஜி அம்சங்கள்
6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + கியூவிஜிஏ கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. மீடியாடெக் டைமன்திட்டி 6300 சிப்செட் மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








