Home
Mobile

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 60 FUSION 5G) ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999 விலையில் வாங்கிவிட முடியும்.

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (Motorola Edge 60 FUSION 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம்(Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி வெளிவந்தது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி போன் 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் பிஓஎல்இடி (Quad Cueved pOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. 2712 x 1220 பிக்சல்கள், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன்.

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த மோட்டோரோலா மாடலில் உள்ளது. டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் யூ.எஸ்.பி-சி ஆடியோ, ஹைப்ரிட் டூயல் சிம், 5 ஜி, வைஃபை 6, புளூடூத் 5.4 , என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

அதுவும் 5500mAh பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 60 FUSION 5G phone available at 16 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X