Home
Mobile

VIVO ஆட்டம் ஆரம்பம்.. தட்டி தூக்கும் பட்ஜெட்டில் 2 புது 5ஜி போன்கள்.. 6500mAh பேட்டரி, IP65.. நம்பி வாங்கலாமா?

சமீபத்தில் சிங்கப்பூரில் அறிமுகமான விவோ ஒய்11 5ஜி (Vivo Y11 5G) மற்றும் விவோ ஒய்21 5ஜி (Vivo Y21 5G) ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளன. இதன் மூலம் விவோ நிறுவனத்தின் இவ்விரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களும் எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

விவோ ஒய்11 5ஜி மற்றும் விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன்களின் (எதிர்பார்க்கப்படும்) இந்திய விலைகள்: டிப்ஸ்டர் சுதான்ஷு வழியாக 91 மொபைல்ஸ்-க்கு கிடைத்த விவரங்களின் படி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 ஆக இருக்கும்.

VIVO ஆட்டம் ஆரம்பம்.. தட்டி தூக்கும் பட்ஜெட்டில் 2 புது 5ஜி போன்கள்!

இதே ஸ்மார்ட்போன் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்டிலும் கிடைக்கும், அதன் விலை ரூ. 16,999 ஆக இருக்கலாம். மறுபுறம் உள்ள விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.18,499 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படலாம். இது மொத்தம் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும்; இதன் விலை ரூ.22,999 வரை செல்லும் என்றும் வெளியான லீக்கில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

விவோ ஒய்11 5ஜி மற்றும் விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை பொறுத்தவரை, இவைகள் சிங்கப்பூரில் வெளியான மாடல்களை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் விவோ ஒய்11 5ஜி மற்றும் விவோ ஒய்21 5ஜி ஆகிய இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களைத்தான் கொண்டுள்ளன. முக்கிய வேறுபாடுகள் ப்ரைமரி கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவில் உள்ளன

விவோ ஒய்11 5ஜி மற்றும் விவோ ஒய்21 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன்கள் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டு இயங்குகின்றன.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போனில் 13எம்பி ப்ரைமரி கேமராவும், QVGA இரண்டாம் நிலை கேமராவும் உள்ளன. மேலும், இதில் 5எம்பி செல்பீ கேமராவும் உள்ளது. மறுபுறம் உள்ள விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போனில் இதே போன்ற கேமரா செட்டப் தான் உள்ளது, ஆனால் இதில் 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது

மேலும் இரண்டு போன்களிலும் 6,500mAh பேட்டரி உள்ளது, ஆனால் விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போனில் 15W சார்ஜிங்கும், விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கும் உள்ளது. இவ்விரு மாடல்களுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையாக கொண்ட ஒரிஜின்ஓஎஸ் 6 ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளன

விவோ ஒய்11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சன்ஷைன் கோல்ட் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய 2 கலர்களிலும், விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போனானது ஷாம்பெயின் கோல்ட் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய 2 கலர்களிலும் அறிமுகம் செய்யப்படலாம். முன்னரே குறிப்பிட்டப்படி இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

OPINION - விவோ ஒய்11 5ஜி மற்றும் விவோ ஒய்21 5ஜி நம்பி மாடல்களை வாங்கலாமா? டிஸ்பிளேவின் அம்சங்கள் நன்றாக இருந்தாலும், இந்த விலையில் எப்எச்டி பிளஸ் (FHD+) மற்றும் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைப்பதால், இவ்விரு மாடல்களின் டிஸ்பிளேக்களுமே சற்று தரம் குறைந்ததாகவே தெரிகிறது.

சிப்செட் - ஓகே தான். இரண்டுமே பட்ஜெட் போன்களுக்கான ஒரு பிரபலமான சிப்செட்டை தான் பேக் செய்கின்றன. இந்த சிப்செட் "சிறப்பான" செயல்திறனை வழங்காவிட்டாலும், ஓரளவு நல்ல செயல்திறனை வழங்குவதாக அறியப்படுகிறது. கேமராக்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் விவோ ஒய்21 5ஜி மாடலை தேர்வு செய்யலாம். ​இரண்டுமே 1 நாள் முழுவதும் அதிக பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் ஒய்11 5ஜி ஸ்மார்ட்போனின் சார்ஜிங் ஸ்பீட் இந்த் விலையில் கிடைக்கும் மற்ற மாடல்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மெதுவானதாக தோன்றுகிறது.


Article Corrections

Correction in Title. Changed IP69 into IP65

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y11 5G Vivo Y21 5G Launching Soon India Price details Full Specifications leaked Is it Worth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X