இந்த 5 உண்மைகள் தெரிந்தால் லெனோவா Z5-ஐ வாங்கவே மாட்டீர்கள்.!

லெனோவா Z5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வைப் பார்த்த பிறகு, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் சோப்பு டப்பா போல தெரிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

|

லெனோவா Z5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வைப் பார்த்த பிறகு, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் சோப்பு டப்பா போல தெரிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அறிமுகமான லெனோவா Z5 ஸ்மார்ட்போனில் மேம்பபட்ட மற்றும் தற்கால பாணிக்கு ஏற்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த 5 உண்மைகள் தெரிந்தால் லெனோவா Z5-ஐ வாங்கவே மாட்டீர்கள்.!

இருந்தாலும் கூட, சில பல உண்மையை சொன்னால் நீங்கள் நிச்சயமாக லெனோவா Z5 ஸ்மார்ட்போனின் மீது வெறுப்பை கக்குவீர்கள். அது என்னவென்றால், குறிப்பிட்ட அம்சங்கள் எல்லாம் லெனோவா Z5 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்று மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு, தொழில்நுட்ப வலைத்தளங்களில் தலைப்பு செய்திகளாகி கடைசியில் "புஸ்" ஆகிப்போன, அதாவது வெளியாகாத 5 அம்சங்கள் தான். அப்படியாக வெளியாகாத 5 அம்சங்களை பற்றிய தொகுப்பே இது.!

ஆல்-ஸ்க்ரீன் டிஸ்பிளே.!

ஆல்-ஸ்க்ரீன் டிஸ்பிளே.!

லெனோவாவின் துணை தலைவரின் படி (சாங் செங்), லெனோவா Z5 ஸ்மார்ட்போன் ஆனது 95 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் கொண்டு இருக்கும். சொல்லியது மட்டுமின்றி அவர் அது சார்ந்த சில படங்களையும் காட்சிப்படுத்தினார். எனினும் கூட அது உண்மையாக மாறவில்லை. வெளியான லெனோவா Z5, ஆனது 19: 9 என்கிற அழ.அளவிலான திரை விகிதம் கொண்ட ஒரு 6.2 இன்ச் டிஸ்பிளே உள்ளது. அதாவது 90% ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் தான்.!

4TB அளவிலான உள் சேமிப்பு

4TB அளவிலான உள் சேமிப்பு

லெனோவா Z5 ஒரு பாரிய சேமிப்புத் திறன் கொண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது. அது ஒரு கற்பனைக்கு எட்டாத 4TB அளவிலான உள்ளடக்க சேமிப்பு என்றும் கூறப்பட்டது. ஆனால் வெளியானது 128 ஜிபி என்கிற அதிகபட்ச உள் சேமிப்பு திறன் தான். நிறுவனத்தின் மூலமாகவே 4TB என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் வழக்கமான மெமரி மாடலில் வெளியானது தான் மாபெரும் கேலிக்கூத்து. 4TB மெமரி இருந்தால் 2000 எச்டி வீடியோக்கள், 150,000 இசை கோப்புகள் மற்றும் ஒரு மில்லியன் புகைப்படங்களை சேமிக்க முடியும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குனு அப்போவே யோசிச்சு இருக்கணும்.!

45 நாட்கள் காத்திருப்பு நேரம் கொண்ட பேட்டரி.!

45 நாட்கள் காத்திருப்பு நேரம் கொண்ட பேட்டரி.!

இதுக்கு 4டிபி மெமரி எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஆம், ஆரம்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒரு அசாதாரணமான பேட்டரியை கொண்டிருக்கும் என்று வதந்திகள் வெளியாகின. அது 45 நாட்கள் காத்திருப்பு நேரம் வரை வழங்கும் என்றும். 30 நிமிட பேச்சு நேரமானது எந்த விதமான பேட்டரி இழப்பையும் ஏற்படுத்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியானதோ பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 3300mAh பேட்டரி தான்.

செயற்கை நுண்ணறிவு உடனான

செயற்கை நுண்ணறிவு உடனான "வேற லெவல்" கேமரா.!

இது கிட்டத்தட்ட உண்மையாகி விட்டது தான். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஒரு சிறந்த டூயல் கேமரா அமைப்பை கொண்டிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனில் அற்புதமான புகைப்படங்கள் பெற போவதில்லை. ஒரு முதன்மை 16 எம்பி சென்சார் மற்றும் ஒரு 8எம்பி இரண்டாம் நிலை சென்சாரை கொண்டுள்ளது. இந்த கேமராவானது, லோ லைட், போர்ட்ரெயிட், மேம்பட்ட HDR, மேம்பட்ட செல்பீக்கள் மற்றும் காட்சிகளை கண்டறிய உதவும் சில ஏஐ (AI) மேம்பாடுகள் உள்ளன.

மற்ற வீழ்ச்சிகள்.!

மற்ற வீழ்ச்சிகள்.!

இது 5ஜி நெட்வொர்க்குகளுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்று டீஸ் செய்யப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. லெனோவா Z5 ஒரு உண்மையான முதன்மை போட்டியாளராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விவரக்குறிப்புகள் அடிப்படையில், ஒரு நடுப்பகுதியில் ரேஞ்சராகவே வெளியானது. அதாவது ஸ்னாப்டிராகன் 636 செயலி, 6 ஜிபி ரேம் உடனான 64 அல்லது 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றுடன் வருகிறது. ஒட்டுமொத்தமாக லெனோவா Z5 ஒரு பெரிய ஏமாற்றம் மற்றும் அது நிறுவனத்தின் சொந்த தவறாகவும் உள்ளது. மிகவும் அதிகமாக விளம்பரப்படுத்திய அளவுக்கு எந்த அம்சங்களையும் வழங்கவிள்லை.

Best Mobiles in India

English summary
Lenovo Z5: Top 5 Rumoured Features That Didn’t Come True. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X