Home
Mobile

மார்ச் 6 குறிச்சாச்சு.. வெறும் ரூ.7,749 க்கு 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

டெக்னோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான டெக்னோ பாப் எக்ஸ் (TECNO POP X) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. நம்ப முடியாத பட்ஜெட்டில் 120Hz டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஐபி64 ரேட்டிங் கொடுத்து உள்ளது. இந்த டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதனாலேயே, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு புதுப்புது மாடல்களை களமிறக்கி வருகின்றன. இதில் டெக்னோ நிறுவனத்தின் புதிய மாடலாக டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டுக்கு வந்துள்ளது.

மார்ச் 6 குறிச்சாச்சு.. வெறும் ரூ.7,749 க்கு 5000mAh பேட்டரி.. மாடல்?

டெக்னோ பாப் எக்ஸ் அம்சங்கள் (TECNO POP X Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட்டை இந்த டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கொண்டுள்ளது.

6.75 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்து உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. எல்லா ஏஐ (ELLA AI) கிடைக்கிறது. மேலும், ஏஐ ஃபிளாஷ் ஸ்னாப் (AI Flash Snap), ஏஐ நாய்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) மற்றும் ஏஐ சாங் ஐடென்டிபிகேஷன் (AI Song Identification) பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏஐ ஸ்கேன் டாகுமெண்ட் (AI Scan Document) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியை கொடுத்து உள்ளது. மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் கிடைத்துள்ளது.

ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) + மைக்ரோஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டுள்ளது. சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) வருகிறது.

மேலும், இன்பிராரெட் சென்சாரை (Infrared Sensor) இந்த டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. பட்ஜெட் விலைக்கு கிடைக்க இருப்பதால், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைத்துள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூத 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது.

ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் பேர்லெசென்ட் ஒயிட் (Pearlescent White) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 8,499ஆக இருக்கிறது. அறிமுக சலுகை போக ரூ.7,749 விலைக்கு கிடைக்க இருக்கிறது. மார்ச் 6ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POP X With 4GB RAM 5000mAh Battery Launched in India Under Rs 9000 Sale From March 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X