8 நிமிடங்கள் போதும்: சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட iQoo 11 5G அறிமுகம்.!

|

ஐக்யூ நிறுவனம் புதிய iQoo 11 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஐபோன் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானாலும், அதற்கு தகுந்த அனைத்து அம்சங்களுமே இதில் இருக்கிறது என்பது தான் உண்மை. குறிப்பாக தனித்துவமான பிராசஸர்,
தரமான கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விவோ வி2 இமேஜிங் சிப்

விவோ வி2 இமேஜிங் சிப்

புதிய iQoo 11 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2பிராசஸர் மற்றும் விவோ வி2 இமேஜிங் சிப் உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த புதிய iQoo 11 5Gஸ்மார்ட்போன்.அதேபோல் Funtouch OS 13சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

இந்த iQoo 11 5G ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 2கே E6 AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளதால் வேகமாக இயக்க முடியும். அதேபோல் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!

ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி

ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி

iqoo 11 5g ஸ்மார்ட்போன் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் ஆதரவு உள்ளது. அதாவது ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இரவில் 4கே வீடியோ..

இரவில் 4கே வீடியோ..

50எம்பி ISOCELL GN5 பிரைமரி சென்சார் + 13எம்பி டெலிபோட்டோ சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் ஆகிய ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான iQoo 11 5G ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் இரவில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

iQoo 11 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். 5ஜி சேவைகளுக்கு
தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. பின்பு 120W FlashCharge சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 8 நிமிடங்களில் 50 சதவீதம் வரை இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிட முடியும் என நிறுவனம் கூறுகிறது.

கனெக்டிவிட்டி

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6,ப்ளூடூத் 5.3இ யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த iqoo 11 5g ஸ்மார்ட்போன். மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

iqoo 11 5g விலை

iqoo 11 5g விலை

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iqoo 11 5g ஆல்ஃபா மற்றும் கிளாஸ் பேக் மாடல் விலை ரூ.59,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சிலிகான் லெதர் பேக் மற்றும் பிஎம்டபிள்யூ டிசைன் மாடல் விலை ரூ.64,999-ஆக உள்ளது. குறிப்பாக ஜனவரி 13-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்பயனர்களுக்கு ரூ.5.000 தள்ளுபடி கிடைக்கும். பின்பு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO 11 5G with 120W charging launched in India: Specs, Price and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X