2 கிட்னியும் பத்தாது போலயே.. iPhone 15 Ultra விலை விவரம் வெளியானது!

|

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் 2023 ஐபோன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 15 அல்ட்ராவின் (iPhone 15 Ultra) விலை விவரம் வெளியாகி உள்ளது.

ஐபோன் 15 அல்ட்ரா என்ன விலைக்கு அறிமுகமாகும்? ஐபோன் 15 சீரீஸின் கீழ் அல்ட்ரா (Ultra) மாடலும் வெளியாகும் என்றால், ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடலின் நிலை என்ன?

ஆப்பிளின் அடுத்த ஐபோன்கள் எப்போது அறிமுகமாகும்? அவைகள் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு கெட் அவுட்!

ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு கெட் அவுட்!

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் சீரீஸின் கீழ், அதாவது ஐபோன் 15 சீரிஸின் விலை உயர்ந்த மாடலாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) வெளியாகாது; மாறாக ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra) மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.

அதாவது ஐபோன் 15 சீரீஸின் கீழ் - ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 அல்ட்ரா (iPhone 15 Ultra) என்கிற மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung குடியரசு தின விற்பனை: இந்த 10 போன்கள் மீதும் 61% ஆபர்.. அதுவும் ஜன.21 வரை மட்டுமே!Samsung குடியரசு தின விற்பனை: இந்த 10 போன்கள் மீதும் 61% ஆபர்.. அதுவும் ஜன.21 வரை மட்டுமே!

உச்சாணி கொம்பில் ஏறிய விலை நிர்ணயம்!

உச்சாணி கொம்பில் ஏறிய விலை நிர்ணயம்!

பெயர் மாற்றம் மட்டுமல்ல, ஐபோன் 15 சீரீஸின் விலையிலும் பெரிய மாற்றம் நடக்கவுள்ளது.

எகனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான அறிக்கையின்படி, பழைய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) உடன் ஒப்பிடும் போது வரவிருக்கும் ஐபோன் 15 அல்ட்ராவின் விலை நிர்ணயம் மிகவும் அதிகமாக இருக்கும்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்பிள் ஐபோன் 15 அல்ட்ராவின் விலையானது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை விட சுமார் 200 டாலர்கள் அதிகமாக இருக்கும். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.16,350 அதிகமாக இருக்கும்.

இந்த கணக்கின்படி பார்த்தால்?

இந்த கணக்கின்படி பார்த்தால்?

ஐபோன் 15 சீரீஸின் ஹை-எண்ட் மாடலின் விலை நிர்ணயமானது 200 டாலர்கள் வரை உயரும் என்கிற அறிக்கையை வைத்து பார்க்கும் போது, வரவிருக்கும் ஐபோன் 15 அல்ட்ராவின் விலை நிர்ணயம் சுமார் 1299 டாலர்களை எட்டும்.

அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1,06,200 வரை செல்லும். உடனே.. "இவ்ளோதானா!" என்று சந்தோஷப்பட்டு கொள்ளவேண்டாம்!

ஏனென்றால், ஐபோன் 15 அல்ட்ரா மாடலானது இதே விலையின் கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது. சுங்க வரி கட்டணங்கள் மற்றும் பிற காரணிகளை கருத்தில் கொண்டு இதன் விலை இன்னும் அதிகரிக்கப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?

ஐபோன் 15 அல்ட்ராவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 15 அல்ட்ராவில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 15 சீரிஸின் கீழ் வெளியாகும் ப்ரோ மற்றும் அல்ட்ரா மாடல்களானது, கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் இடம்பெற்ற டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை கொண்டிருக்கலாம்.

மேலும் அடுத்த தலைமுறை ஐபோன்கள் அனைத்திலுமே பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே டிசைன் (Punch Hole Display Design) பெறலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15 அல்ட்ரா மாடலில் சீரீஸில் 48எம்பி வைட் லென்ஸ் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். மேலும் அதில் ஆப்டிகல் ஜூம் அல்லது லிடார் ஸ்கேனருக்கான டெலிஃபோட்டோ லென்ஸும் இடம்பெறலாம்.

ஐபோன் 15 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்?

ஐபோன் 15 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்?

நினைவூட்டும் வண்ணம், ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 சீரீஸை கடந்த செப்டம்பர் 2022-ல் அறிமுகப்படுத்தியது.

மற்ற எல்லா ஐபோன் சீரீஸ்களை போலவே, குபெர்டினோவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம் இந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான தேதி குறித்த எந்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை!

Best Mobiles in India

English summary
iPhone 15 Ultra Price Will Be Very Higher Than iPhone 14 Pro Max

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X