OnePlus 11 வரும் நேரத்தில் OnePlus 10 Pro 5Gக்கு அதீத தள்ளுபடி! புகுந்து விளையாடும் அமேசான்!

|

OnePlus 11 அறிமுகமாக இருக்கும் நிலையில் OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போன் அமேசானில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது அனைத்து ஸ்மார்ட்போனுக்கும் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும், ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற போன் ஆகும். சிறந்த ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க இது சரியான வாய்ப்பு.

OnePlus 10 Pro 5G

OnePlus 10 Pro 5G

OnePlus நிறுவனம் OnePlus 11 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அறிமுகத்திற்கு முன்பாக அமேசானில் OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போன் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ரூ.6000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி கூப்பனையும் பெறலாம். தற்போது தள்ளுபடி பெறும் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 23, 2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி தள்ளுபடி விலை இதோ

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி தள்ளுபடி விலை இதோ

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.66,900 ஆகவும் 12ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.71,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.6000 பிளாட் தள்ளுபடியை பெறலாம்.

கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.59,999 என வாங்கலாம். வோல்கானிக் ப்ளாக் மற்றும் எமரால்டு ப்ளாக் ஃபாரஸ்ட் வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

OnePlus 10 Pro 5G சிறப்பம்சங்கள்

OnePlus 10 Pro 5G சிறப்பம்சங்கள்

OnePlus 10 Pro 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. P3 வண்ணங்களை ஆதரிக்கும் வகையிலான LTPO தொழில்நுட்பம் இதில் இருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 1440 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. OnePlus 10 Pro 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

48 எம்பி சோனி IMX789 கேமரா

48 எம்பி சோனி IMX789 கேமரா

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேகமாக 48 மெகாபிக்சல் சோனி IMX789 சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. அல்ட்ரா வைட் சென்சாராக 50 மெகாபிக்சல் Samsung ISOCELL JN1 சென்சார் மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் சோனி IMX615 சென்சார் இடம்பெற்றிருக்கிறது.

OnePlus 11 5G

OnePlus 11 5G

முன்னதாகவே குறிப்பிட்டது போல் OnePlus 11 5G ஆனது பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 11 இன் விலை அறிமுகத்திற்கு முன்னதாகவே கசிந்துள்ளது.

OnePlus 11 விலை குறித்து பார்க்கையில், OnePlus 11 5G இன் விலை ரூ.55,000 முதல் ரூ.65,000 வரையில் இருக்கலாம். அதாவது ஒன்பிளஸ் 11 5ஜி விலை ரூ.61,999 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட மலிவானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

OnePlus 11 5G அம்சங்கள்

OnePlus 11 5G அம்சங்கள்

வெளியான தகவலின்படி, OnePlus 11 5G ஆனது 1440 x 3216 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா, 48 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 32 எம்பி மூன்றாவது நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார், ஃபேஸ் அன்லாக் அம்சம் போன்ற ஆதரவுகள் இதில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

OnePlus 11 ஆனது பெயரிடப்படாத octa-core செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் வாட்ஸ் குறித்த விவரங்கள் தெரியவில்லை ஆனால் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huge discount on OnePlus 10 Pro 5G ahead of OnePlus 11 Launch! Amazon instant Discount!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X