மிட்-ரேன்ஜ் விலையில் ஒரு முரட்டு போன்! 5ஜி மொபைல் மார்க்கெட்டை 'ரூல்' பண்ண போகும் Samsung Galaxy A23 5G!

|

மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ், சாம்சங் நிறுவனம் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G) ஆகும்.

இது 5ஜி-க்கான ஆதரவை வழங்குவதோடு மட்டுமில்லாமல் விலைக்கு ஏற்ற சில வொர்த் ஆன அம்சங்களையும் வழங்குகிறது. அதென்ன அம்சங்கள்? இதன் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

4ஜி மாடலின் வெற்றியை தொடர்ந்து 5ஜி மாடல்!

4ஜி மாடலின் வெற்றியை தொடர்ந்து 5ஜி மாடல்!

இந்தியாவில் சாம்சங்கின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் கேலக்ஸி ஏ23 5ஜி மாடல் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி சி23 4ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வருகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெறுமனே 5ஜி-க்கான ஆதரவில் மட்டும் கவனம் செலுத்தாமல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!

பெரிய டிஸ்பிளே.. கூடவே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்!

பெரிய டிஸ்பிளே.. கூடவே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்!

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனுடன் 6.6-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 120Hz ரெஃப்ரெஷ் உடன் வருகிறது மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் பாலிகார்பனேட் பாடியுடன் வருகிறது.

ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்.. கூடவே 8ஜிபி வரை ரேம்!

ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்.. கூடவே 8ஜிபி வரை ரேம்!

சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் உள்ளது. இது 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 4.1.1 உடன் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் அணுக கிடைக்கும்.

வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!

50எம்பி குவாட் கேமரா.. கூடவே 5000mAh பேட்டரி!

50எம்பி குவாட் கேமரா.. கூடவே 5000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உடனான 50MP ப்ரைமரி சென்சார் + 5MP அல்ட்ராவைட் + 2MP மேக்ரோ கேமரா + 2MP டெப்த் சென்சார் உள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் கேமரா செட்டப் 30fps வேகத்தின் கீழ் 1080P வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8MP செல்பீ கேமரா உள்ளது.

கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது.

என்ன விலை.. எப்போது முதல் விற்பனை?

என்ன விலை.. எப்போது முதல் விற்பனை?

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்; மறுகையில் உள்ள 8GB + 128GB ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும். மேலும் இது சில்வர், ஆரஞ்சு மற்றும் லைட் க்ரீன் என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

விற்பனையை பொறுத்தவரை இது சாம்சங் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ், சாம்சங்.காம் மற்றும் பார்ட்னர் ஸ்டோர்ஸ் வழியாக ஜனவரி 20 முதல் வாங்க கிடைக்கும். இருப்பினும், இது சாம்சங் லைவ் மூலம் ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதலே விற்பனைக்கு திறந்துவிடப்படும்.

Best Mobiles in India

English summary
Do Not Buy Any Mid Range 5G Phone Until January 18 Because Samsung Galaxy A23 5G Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X