நினைச்சத விட கம்மி விலை.. OnePlus 11 5G அறிமுகமானது.. இந்திய விற்பனை சும்மா பிச்சுக்க போகுது!

|

ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போன் ஆனது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (Price) என்ன? இது என்னென்ன அம்சங்களை (Specifications) பேக் செய்கிறது? இதன் இந்திய விற்பனை எப்போது தொடங்கும்? இதோ விவரங்கள்:

மூச்சு முட்ட வைக்கும் முக்கிய அம்சங்கள்!

மூச்சு முட்ட வைக்கும் முக்கிய அம்சங்கள்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் (Best Smartphone) ஒன்றாக இருக்கும் என்றும், இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியாகும் சிறந்த 5ஜி போன்களில் (Best 5G Phone) ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது இன்று (அதாவது ஜனவரி 4, 2023) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது லேட்டஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen2 SoC), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) உடன் கூடிய QHD+ OLED டிஸ்ப்ளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற "சில அட்டகாசமான" முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது!

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் 12GB + 256GB ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.48,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள 16GB + 256GB ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.52,900 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 16GB + 512GB ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.59,010 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இதே போன்ற விலை நிர்ணயம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஆனது தாறுமாறாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று (Feb 7th, 2023) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது!

தெறிக்கவிடும் டிஸ்பிளே மற்றும் சிப்செட்!

தெறிக்கவிடும் டிஸ்பிளே மற்றும் சிப்செட்!

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன், 6.7-இன்ச் அளவிலான குவாட் எச்டி+ 2.75டி ப்ளெக்ஸிபிள் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR 10+, டால்பி விஷன், 1300 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 16GB வரையிலான LPDDR5X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ப்ளீஸ்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!ப்ளீஸ்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!

தட்டித்தூக்கப்போகும் கேமராக்கள்!

தட்டித்தூக்கப்போகும் கேமராக்கள்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வரும் ஒன்பிளஸ் 11 ஆனது ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போனும் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மொத்தம் 3 கேமராக்கள் உள்ளன.

முதலாவது - சோனி IMX890 சென்சாரை கொண்ட 50MP மெயின் கேமரா (f/1.8, OIS) ஆகும். இரண்டாவது - சோனி IMX581 சென்சாரை கொண்ட 48MP அல்ட்ரா-வைட் கேமரா (f/2.2, 3.5cm மேக்ரோ சென்சார்) ஆகும். கடைசி மற்றும் மூன்றாவதாக 32MP RGBW (டெலிஃபோட்டோ; 2x ஆப்டிகல் ஜூம்; Sony சென்சார் IMX709) கேமரா உள்ளது.

ஒன்பிளஸ் 11-ன் ரியர் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷும் அடக்கம் மற்றும் இது முழுக்க முழுக்க ஒரு ஹாசல்பிளாட் பிராண்டிங் கேமரா செட்டப்பும் கூட! முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 16MP (f/2.4) செல்பீ கேமரா உள்ளது!

நம்ப முடியாத பாஸ்ட் சார்ஜிங் உடன் வெயிட்டான பேட்டரி!

நம்ப முடியாத பாஸ்ட் சார்ஜிங் உடன் வெயிட்டான பேட்டரி!

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது USB டைப்-சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் போன்ற ஆதரவுகளை வழங்குகிறது.

அளவீட்டில் 163.1×74.1×8.53 மிமீ மற்றும் எடையில் 205 கிராம் உள்ள ஒன்பிளஸ் 11 ஆனது 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஓஎஸ், க்ளோனாஸ் (GLONASS) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் வழங்குகிறது.

கடைசியாக இது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது!

Best Mobiles in India

English summary
At Unbelievable Price OnePlus 11 5G Phone Launched Officially in China Check Full Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X