நோக்கியா, மோட்டோரோலா பீச்சர் போன்களுக்கு தள்ளுபடி அறிவித்த அமேசான்: மிஸ் பண்ணாதீங்க, வாங்கிருங்க!

|

அமேசான் தளத்தில் Republic Day Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் தரமான பீச்சர் போன் மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு விற்பனையை பயன்படுத்துவது நல்லது

சிறப்பு விற்பனையை பயன்படுத்துவது நல்லது

எனவே குறைந்த விலையில் ஒரு நல்ல பீச்சர் போன்களை வாங்க நினைக்கும் மக்கள் இந்த அமேசான் சிறப்பு விற்பனையை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இப்போது அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பீச்சர் போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வச்சான் பாரு வெடி.. சீன Smart TV-களின் ஆதிக்கத்தை ஒடுக்க.. இந்தியாவில் களமிறங்கிய 2 ஜப்பான் டிவிகள்!வச்சான் பாரு வெடி.. சீன Smart TV-களின் ஆதிக்கத்தை ஒடுக்க.. இந்தியாவில் களமிறங்கிய 2 ஜப்பான் டிவிகள்!

 நோக்கியா 5310

நோக்கியா 5310

அமேசான் தளத்தில் நோக்கியா 5310 பீச்சர் போன் மாடலுக்கு தற்போது 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பீச்சர் போன் மாடலை ரூ.3,399-விலையில் வாங்க முடியும். 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, பிஸிக்கல் T9 கீ-போர்டு, மீடியாடெக் எம்டி 6260 ஏ சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

LinkedIn ஷாக் ரிப்போர்ட்! 88% இந்திய இளைஞர்கள் தானாக வேலையை விட்டு விலக தயார்! அசர வைக்கும் காரணம்.!LinkedIn ஷாக் ரிப்போர்ட்! 88% இந்திய இளைஞர்கள் தானாக வேலையை விட்டு விலக தயார்! அசர வைக்கும் காரணம்.!

 நோக்கியா 5310 அம்சங்கள்

நோக்கியா 5310 அம்சங்கள்

8 எம்பி ரேம் மற்றும் 16 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 5310 பீச்சர் போன் மாடல். பின்பு சிங்கிள் விஜிஏ கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, 1,200 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நோக்கியா 5310 மாடல் வெளிவந்துள்ளது.

 மோட்டோரோலா ஏ70

மோட்டோரோலா ஏ70

அமேசான் தளத்தில் மோட்டோரோலா ஏ70 மாடல் ஆனது முன்பு ரூ.2320-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை தற்போது ரூ.1849-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Republic Day Sale: வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!Republic Day Sale: வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!

மோட்டோரோலா ஏ70

மோட்டோரோலா ஏ70

மோட்டோரோலா ஏ70 சாதனம் ஆனது 1750 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே 6 நாட்கள் வரை இந்த போன் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 2.4-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் பிராசஸர், வயர்லெஸ் எப்எம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

 நோக்கியா 105 பிளஸ்

நோக்கியா 105 பிளஸ்

நோக்கியா 105 பிளஸ் பீச்சர் போன் ஆனது முன்பு ரூ.1699-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடி மூலம் இந்த பீச்சர் போனை ரூ.1299-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

நோக்கியா 105 பிளஸ் அம்சங்கள்

நோக்கியா 105 பிளஸ் அம்சங்கள்

நோக்கியா 105 பிளஸ் மாடலில் 32ஜிபி மெமரி கார்டை பயன்படுத்த முடியும். கூடுதலாக இது ஒரு எம்பி3 பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் உள்ளமைக்கப்பட்ட டார்ச்சைக் கொண்டுள்ளது. அதேபோல் ஸ்னேக் போன்ற கிளாசிக் கேம்களுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.

அதேபோல் இந்த போனின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக சுமார் 1.5 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. பின்பு 18 நாட்கள் வரை standby time-ஐ வழங்குகிறது இந்த நோக்கியா போன். மேலும் இந்த பீச்சர் போன் 1.77-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் S30+ இயங்குதளத்தில் இயங்கும்.

Airtel ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் பரபர தகவல்.!Airtel ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் பரபர தகவல்.!

நோக்கியா 225 4ஜி

நோக்கியா 225 4ஜி

நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் ஆனது முன்பு ரூ.4,399-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த போனுக்கு அமேசான் தளத்தில் 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோக்கியா பீச்சர் போனை தற்போது ரூ.3,599-விலையில் வாங்க முடியும்.

இந்த நோக்கியா 225 4ஜி போன் ஆனது 2.4-இன்ச் டிஸ்பிளே, Unisoc UMS9117 பிராசஸர், 64எம்பி ரேம், 128எம்பி ஸ்டோரேஜ், 4ஜிபி வோல்ட்இ ஆதரவு, ப்ளூடூத் 5.0, FM ரேடியோ, மைக்ரோ-USB போர்ட் மற்றும் 3.5MM ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Announces 18 Percent Discount on Nokia, Motorola Feature Phones : Full Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X