சரியான சம்பவம்.. ரூ.13,999க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? வருகிறது இல்ல வந்துவிட்டது!

|

மீடியாடெக் ஹீலியோ ஜீ99 எஸ்ஓசி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் Realme 10 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி டூயல் ரியர் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா என பல ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என விற்பனைக்கு கிடைக்கிறது.

Realme 10

Realme 10

Realme 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (திங்கட்கிழமை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷென்சென் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போனாக ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி உடன் இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் ஆதரவோடு இது வெளியாகி உல்ளது.

50 எம்பி டூயல் ரியர் கேமரா

50 எம்பி டூயல் ரியர் கேமரா

இந்த ஸ்மார்ட்போன் AnTuTu செயல்திறனில் 390,000 புள்ளி மதிப்பெண்களை பெற்றிருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது. Realme 10 ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

Realme 10 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Realme 10 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Realme 10 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்ன்ஸ் ஸ்டோரேஜ் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனுக்கு ஆரம்ப சலுகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை

8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை

அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.16,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது க்ளாஷ் ஒயிட் மற்றும் ரஷ் ப்ளாக் வண்ண விருப்பத்தில் வெளியாகி உள்ளது.

Realme 10 சிறப்பம்சங்கள்

Realme 10 சிறப்பம்சங்கள்

Realme 10 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம் மற்றும் 1000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்டுள்ளது.

கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

இந்த டிஸ்ப்ளே ஆனது கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

Realme 10 ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இது ப்ரோலைட் இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் நைட் மோட் ஃப்ளாஷ் நைட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

Realme 10 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. 28 நிமிடத்தில் 50 நிமிடம் வரை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனின் எடை 178 கிராம் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா பூம் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் இது பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
50Mp Camera, 5000mAh Battery Powered Realme 10 Smartphone Launched at Rs.13,999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X