விட்ராதீங்க ப்ரோ.. ரூ.5,000 விலை குறைப்பு.. 7000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?
எந்த பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே ரூ.5,000 விலை குறைப்பு போக ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,000 விலை குறைப்பு போக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலை குறைப்புடன் ரூ.34,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடி கொடுக்கப்படும். ஆகவே, ரூ.33,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி ஜிடி 7 அம்சங்கள் (Realme GT 7 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ 4என்எம் (Octa Core Dimensity 9400e 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், இம்மார்டலிஸ் ஜி720 எம்சி12 ஜிபியு (Immortalis G720 MC12 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைத்துள்ளது. 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைத்துள்ளது. 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் ஹார்ட்வேர் லெவல் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆர்மர் ஷெல் கிளாஸ் (Armor Shell Glass) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமராவும் கிடைக்கிறது.
மேலும், டெலிபோட்டோவில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைத்துள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஏஐ நைட் விஷன் மோட் (AI Night Vision Mode), டிராவல் ஸ்டைல் சிட்டி (Travel Style City), டிராவல் ஸ்டைல் மவுன்டெய்ன் (Travel Style Mountain) பீச்சர்களை கொடுக்கிறது.
2K லைவ் போட்டோ (Live Photo), அண்டர்வாட்டர் போட்டோகிராபி (Underwater Photography), ஏஐ கிளார் ரீமூவல் (AI Glare Removal), ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape) போன்ற பீச்சர்களையும் இந்த கேமரா கொண்டுள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி கிடைப்பதால், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது.
120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.3 எம்எம் தடிமன் மற்றும் 206 கிராம் எடை கொடுத்துள்ளது. டைப்-சி ஆடியோ (Type C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது.
மேலும், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைத்துள்ளது. 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஐஸ்சென்ஸ் பிளாக் மற்றும் ஐஸ்சென்ஸ் ப்ளூ ஆகிய 2 கலர்களில் இந்த ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications