தெரியுமா? Gmail-ல் ஒளிந்திருக்கும் இந்த ஆட்டோமேட்டிக் செட்டிங்-ஐ ON செஞ்சா Inbox-ல ஒரு அதிசயம் நடக்கும்!

|

ஜிமெயிலில் (Gmail) ஒளிந்து இருக்கும் ஒரு ஆட்டோமேட்டிக் செட்டிங்கை (Automatic Setting) பற்றி கூறினால்.. "அடச்சே.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!

ஏனென்றால் இந்த ஜிமெயில் செட்டிங்க்கை பயன்படுத்தும் பட்சத்தில் உங்கள் இன்பாக்ஸில் (Inbox) ஒரு அதிசயமே நடக்கும்!

அதென்ன செட்டிங்?

அதென்ன செட்டிங்?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் (Gmail Inbox) ஆனது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட வடிவத்தில் இருந்தால்.. உங்களுக்கு எவ்வளவு நேரம் மிச்சம் ஆகும் என்று!

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் - ஜிமெயிலில் உள்ள ஆட்டோமெட்டிக் ஃபில்டர்ஸ் (Gmail Automatic Filters) என்கிற செட்டிங்கை பயன்படுத்துவதே ஆகும்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஜிமெயிலில் உள்ள இந்த ஆட்டோமெட்டிக் ஃபில்டர்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் ஒரு அதிசயமே நடக்கும்.

யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?

அதென்ன அதிசயம்?

அதென்ன அதிசயம்?

ஜிமெயிலில் உள்ள ஆட்டோமேட்டிக் ஃபில்டர் என்கிற செட்டிங் வழியாக உங்களுக்கு வரும் எக்கசக்கமான இமெயில்களை மிகவும் நேர்த்தியாக வரிசைப்படுத்த முடியும்; அதன் விளைவாக உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸை மிகவும் எளிதாக நிர்வகிக்கவும் / பயன்படுத்தவும் முடியும்.

இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு வரும் ஒவ்வொரு இமெயில்களின் மீதான கட்டுப்பாட்டையும் நீங்கள் பெறலாம். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் ஒரு ஆட்டோமெட்டிக் ஃபில்டரை கிரியேட் செய்து பார்க்கும் வரை.. இதன் உண்மையான பலனை உங்களால் அறிந்துகொள்ளவே முடியாது!

ஜிமெயிலில் ஆட்டோமேட்டிக் ஃபில்டர்களை உருவாக்குவது எப்படி?

ஜிமெயிலில் ஆட்டோமேட்டிக் ஃபில்டர்களை உருவாக்குவது எப்படி?

- உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸின் மேல் வலது மூலையில் உள்ள கியர் ஐகானை (Gear Icon) கிளிக் செய்யவும்.

- பின்னர் தெரியும் டிராப்-டவுன் மெனுவிலிருந்து (Drop-Down Menu) செட்டிங்ஸ் (Settings) என்பதை தேர்வு செய்யவும்

- செட்டிங்ஸ் பேஜில் பில்டர்ஸ் மற்றும் பிளாக்ட்டு அட்ரெஸஸ் (Filters and Blocked Addresses) என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

- பின்னர் கிரியேட் நியூ பில்டர் (Create New Filters) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!

யாரை அல்லது எந்த வார்த்தையை?

யாரை அல்லது எந்த வார்த்தையை?

- இப்போது ஃப்ரம் (From) என்கிற ஃபீல்டில் இருந்து, நீங்கள் ஃபில்டர் செய்ய விரும்பும் இமெயில்களை அனுப்புபவரின் இமெயில் ஐடி (email ID) அல்லது டொமைனை (Domain) டைப் செய்யவும்

இந்த இடத்தில் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமல்ல குறிப்பிட்ட சப்ஜெக்ட் (Subject) அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளை (Words) கூட டைப் செய்து அதை ஃபில்டர் செய்யலாம்

- பின்னர் கிரியேட் ஃபில்டர் வித் திஸ் சேர்ச் (Create filter with this search) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- அடுத்து தெரியும் ஸ்க்ரீனில், ஃபில்டர் செய்ய விரும்பும் ஆக்ஷன்களை (Actions) தேர்வு செய்யவும்.

எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அனுப்புநரிடமிருந்து வரும் அனைத்து மெயில்களும் ஆட்டோமேட்டிக்காக படிக்கப்பட்டு இருக்க வேண்டும் (Marked as read), அல்லது டெலிட் செய்யப்பட வேண்டும் (Delete) அல்லது குறிப்பிட்ட லேபிளின் (Label) கீழ் சென்று ஆர்ச்சிவ் (Archive) ஆக வேண்டும் என்று தேர்வு செய்யலாம்.

- ஒருவேளை நீங்கள் ஃபில்டர் செய்வதற்காக கையாளும் வார்த்தைகளை கொண்ட அனைத்து இமெயில்களுக்கும் இந்த ஃபில்டரை பயன்படுத்த விரும்பினால் - ஆல்சோ அப்ளை ஃபில்டர் டூ எக்ஸ் மேட்சிங் கான்வேர்ஷேஷன்ஸ் (Also apply filter to x matching conversations) என்கிற செக்பாக்ஸை தேர்ந்தெடுக்கவும்.

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

கடைசியாக கிளிக் செய்த வேண்டிய ஆப்ஷன்!

கடைசியாக கிளிக் செய்த வேண்டிய ஆப்ஷன்!

- பின்னர் உங்கள் ஃபில்டரை சேவ் (Save) செய்ய கிரியேட் ஃபில்டர் (Create Filter) என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான் வேலை முடிந்தது!

- ஒருவேளை நீங்கள் உருவாக்கிய ஃபில்டரை எடிட் (Edit) அல்லது டெலிட் (Delete) செய்ய விரும்பினால், பில்டர்ஸ் மற்றும் பிளாக்ட்டு அட்ரெஸஸ் (Filters and Blocked Addresses) டேப்பில் உள்ள ஃபில்டரின் அருகே காணப்படும் எடிட் அல்லது டெலிட் பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவு தான்! இப்போது எல்லாமே தயார் நிலையில் இருக்கும். உங்களுக்கு வரும் இமெயில்கள் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்படும்!

Best Mobiles in India

English summary
Many Gmail Users Dont Know This Automatic Setting Which Helps To Filter All kind of Emails

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X