கூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி?

இன்டர்நெட் அல்லது மொபைல் நெட்வொர்க் இணைப்பு இல்லாத சமயங்களில் உங்களின் கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்ஸ் மற்றும் கூகுள் ஸ்லைட் ஃபைல்களை இயக்குவது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.

|

இணையத்தில் நம் சந்தேகங்களை போக்கும் தேடுப்பொறி நிறுவனமாக இருப்பதோடு கூகுள், நம் டிஜிட்டல் வாழ்விற்கு தேவையான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் இணையம் இல்லாத இடங்களில் அவற்றை பயன்படுத்தும் வசதியையும் கூகுள் வழங்கியிருக்கிறது.

கூகுள் டிரைவ் தரவுகளை ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி?

அந்த வகையில் கூகுளில் தரவுகளை ஆஃப்லைனில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் அல்லது மொபைல் நெட்வொர்க் இணைப்பு இல்லாத சமயங்களில் உங்களின் கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்ஸ் மற்றும் கூகுள் ஸ்லைட் ஃபைல்களை இயக்குவது எப்படி என்பதை இங்கு தொகுத்திருக்கிறோம்.

ஆஃப்லைனில் தரவுகளை இயக்கும் வசதியை எவ்வாறு ஆன் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஆஃப்லைனில் இயக்குவது எப்படி?

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஆஃப்லைனில் இயக்குவது எப்படி?

- முதலில் இன்டர்நெட் இணைப்பை ஆன் செய்ய வேண்டும்.

- இனி கூகுள் க்ரோம் பிரவுசரை திறக்க வேண்டும். இங்கு இன்காக்னிட்டோ மோட் (incognito mode) பயன்படுத்த கூடாது.

- இனி கூகுள் டாக்ஸ் ஆஃப்லைன் க்ரோம் எக்ஸ்டென்ஷனை (Google Docs offline Chrome extension) இன்ஸ்டால் செய்ய வேண்டும். சாதனத்தில் உங்களது தரவுகளை சேமிக்க தேவையான அளவு மெமரி காலி செய்து வைத்த வேண்டும்.

கூகுள் டிரைவ் தரவுகளை ஆஃப்லைனில் இயக்குவது-

கூகுள் டிரைவ் தரவுகளை ஆஃப்லைனில் இயக்குவது-

- க்ரோம் பிரவுசரில் சைன்-இன் (Sign-in) செய்ய வேண்டும்.

- இனி drive.google.com/drive/settings' வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

- அடுத்து Sync Google Docs, Sheets, Slides & Drawings files to this computer so that you can edit offline ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆன்ட்ராய்டில் எவ்வாறு செய்ய வேண்டும்?

ஆன்ட்ராய்டில் எவ்வாறு செய்ய வேண்டும்?

- ஸ்மார்ட்போனில் கூகுள் டிரைவ் செயலியை திறக்க வேண்டும்.


- நீங்கள் ஆஃப்லைனில் சேமிக்க வேண்டிய தரவினை க்ளிக் செய்து, செங்குத்தாக இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.


- தரவினை ஆஃப்லைனில் சேமிக்க Available offline ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆஃப்லைனில் சேமகிக்ப்பட்ட தரவுகளை தேடுவது எப்படி?

ஆஃப்லைனில் சேமகிக்ப்பட்ட தரவுகளை தேடுவது எப்படி?

- முதலில் டிரைவ், டாக்ஸ், ஷீட்ஸ் அல்லது ஸ்லைட்ஸ் (Drive, Docs, Sheets, or Slides) திறக்க வேண்டும்.


- மெனு பட்டனை க்ளிக் செய்து ஆஃப்லைன் (Offline) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


கம்ப்யூட்டரில் தரவுகளை ஆஃப்லைனில் வேலை செய்ய பேக்கப் மற்றும் சின்க் (Backup and Sync) ஆப்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்களது தரவுகள் மேக் அல்லது வின்டோஸ் கம்ப்யூட்டரில் இருந்து பேக்கப் மற்றும் சின்க் செய்ய முடியும். ஒருவேளை கூகுள் அக்கவுன்ட் பயன்படுத்தினால் டிரைவ் ஃபைல் ஸ்ட்ரீம் (Drive File Stream) பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to use Google Drive files offline on your computer and Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X