Home
Mobile

OPPO ஒரே போடு.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 7050mAh பேட்டரி.. 16GB ரேம்.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படி ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதியாகிவிட்டது. 200 எம்பி கேமரா, 100W சார்ஜிங், 7050mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்க உள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது, அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டை தொடர்ந்து, குளோபல் வெளியீடு இருக்கும் என்பதையும் ஓப்போ நிறுவனமானது உறுதி செய்துள்ளது. ஆனால், இந்திய மார்கெட்டில் வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது, அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது.

OPPO ஒரே போடு.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 7050mAh பேட்டரி!

பிஐஎஸ் (BIS) சர்டிபிகேஷனுக்கு ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வந்துள்ளது. ஆகவே, ஓரிரு வாரங்களில் அதிகார்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். சீன வெளியீட்டுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். பர்ஃபாமென்ஸ், டிஸ்பிளே, கேமரா போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்ட இருக்கிறது.

பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வருவதற்கு முன்னதாக முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதில் டிப்ஸ்டர் தேபயன் ராய் (Debayan Roy) எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதுவே லேட்டஸ்ட்டாக கசிந்த பீச்சர்களாக இருக்கின்றன. அதோடு பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்ததும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, சீன வெளியீட்டை தொடர்ந்து உடனடியாக குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த மாடலுக்கு போட்டியாக விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனும் வெளியாக இருக்கிறது. இதில் பிரீமியம் டெலிபோட்டோ கிடைக்க உள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டி901 (Sony LYT901) சென்சார் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவுக்கு சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) சென்சாரும், டெலிபோட்டோ கேமராவுக்கு ஓவி52ஏ (OV52A) சென்சார் வருகிறது.

மேலும், பெரிஸ்கோப் கேமராவுக்கு ஜேஎன்எல் (JNL) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 10X டெலிபோட்டோ ஜூமிங் உள்ளது. இதுபோக 50 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. இதில் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. டெலிமேக்ரோ சப்போர்ட் மற்றும் மல்டி ஸ்பெக்ட்ரல் லென்ஸ் சப்போர்ட் கொடுக்க உள்ளது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் கேமரா கிடைக்கும்.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7050mAh பேட்டரி கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. மெட்டல் ஃபிரேம் கொண்ட மாடலாக இருக்கிறது. விலையிலும் பிரீமியமாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Ultra With 200MP Camera India Launch Confirmed Listed on BIS Certification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X