ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. ரயில் டிக்கெட் கேன்சல்.. இப்படி செய்தால் ரீ ஃபண்ட் கிடைக்காது.. இதோ முழு விவரம்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சில முக்கிய துறைகளின் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் புறப்படுவதற்கு முன்பு டிக்கெட்டை (Train Ticket) ரத்து செய்தால் வழங்கப்படும் ரீஃபண்ட் கட்டணம் குறித்த விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ரயில் டிக்கெட் கேன்சல் செய்வது மற்றும் அதற்கான ரீ ஃபண்ட் பெறுவது தொடர்பான புதிய நடைமுறைகள் வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.நீங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திட்டத்தை மாற்றி டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும். இதில் ரயில்வே நிர்ணயித்துள்ள நிலையான குறைந்தபட்ச கட்டணம் (Flat Cancellation Charge) மட்டுமே பிடிக்கப்படும். அதுவும் இது நீங்கள் பயணம் செய்யவிருந்த வகுப்பை (AC, Sleeper) பொறுத்து ரீஃபண்ட் தொகை மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.அதேபோல் ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் உங்கள் டிக்கெட் தொகையில் 25 சதவீதம் அபராதமாகப் பிடிக்கப்படும். மீதமுள்ள 75 சதவீதம் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும்.
3.பயணத்திற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில், டிக்கெட் கட்டணத்தில் சரிபாதி அதாவது 50 சதவீதம் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது. அதாவது 100 சதவீதத் தொகையும் ரத்து கட்டணமாகவே கருதப்படும்.
குறிப்பாக தற்போது ரயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் போடப்படுகிறது. சார்ட் போட்ட பிறகு நீங்கள் கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட வராது. நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
அதுவும் இந்த டிக்கெட் ரீஃபண்ட் விதிகள் ஆன்லைன் (E-tickets)மற்றும் ரயில்வே கவுண்ட்டர்களில் வாங்கும் கன்பார்ம் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய ரீஃபண்ட விதிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரும்.

இதுதவிர ரயில்வே (Indian Railways) நெட்வொர்க்கை நவீனமயமாக்குதல் மற்றும் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விரைவில் ஐந்து முக்கிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ரத்து செய்யும் நேரம் மற்றும் திருப்பி தரப்படும் தொகை குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.
திருப்பி தரப்படும் தொகை
- 72 மணி நேரத்திற்கு முன்பு: 100 சதவீதம் ரீஃபண்ட்
- 72 மணி நேரம் முதல் 24 மணி நேரம்: 75 சதவீதம் ரீஃபண்ட்
- 24 மணி நேரம் முதல் 8 மணி நேரம்: 50 சதவீதம் ரீஃபண்ட்
- 8மணி நேரத்திற்கு குறைவாக: ரீஃபண்ட் இல்லை


Click it and Unblock the Notifications








