என்ட்ரி-லெவல் கிங் வந்துட்டான்.. Realme புது Narzo Lite மாடல்.. பக்கா பட்ஜெட்டில் 5ஜி, 6GB ரேம்.. எந்த மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனம் அதன் "லைட்" (Lite) வெர்ஷனை ஸ்மார்ட்போனை திரும்பி கொண்ட வரவுள்ளது. அதாவது ரியல்மி நிறுவனம் ஆனது நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் தனது லைட் வெர்ஷனை மீண்டும் கொண்டு வருகிறது.
நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் நார்சோ 80 லைட் 5ஜி (Narzo 80 Lite 5G) மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது, ஆனால் நார்சோ 90 சீரிஸில் (Narzo 90 Series) அப்படி ஒரு மாடல் இல்லை. ஆனால் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விவரங்கள் 91 மொபைல்ஸ் (91Mobiles) வலைத்தளம் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது ரியல்மி நார்சோ 100 சீரிஸில் (Realme Narzo 100 Series) இருந்து வரும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இது ஒரு லைட் மாடல் என்பதால் இதன் விலை நிகாயமாக பட்ஜெட் பிரிவில் தான் இருக்கும்.
வெளியான விவரங்களின் படி, ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பேஸிக் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திலும் கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை எண்ட் மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும். ரியல்மியின் இந்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக் மற்றும் ஃப்ராஸ்ட் சில்வர் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
OPINION: ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை காத்திருந்து வாங்கலாமா? பலவிதமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகள் இருப்பதால், பயனர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளும் விருப்பம் கிடைக்கும். கூடுதலாக - இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், இந்த போன் பட்ஜெட் பிரிவின் கீழ் தான் இருக்கும் என்பதை வலுவாக உணர்த்துகின்றன. இதுதவிர்த்து ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.
இருப்பினும் நாம் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்ட மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் நார்சோ 80 லைட் ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.10,499 க்கு அறிமுகமானது. இப்போதும் கூட என்ட்ரி-லெவல் பிரிவில் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக திகழ்கிறது
நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எச்டி+ 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட், 6000mAh பேட்டரி, 32எம்பி ப்ரைமரி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேற்கண்ட அம்சங்கள் - ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மாட்போனை அதன் விலைக்கு ஒரு முழுமையான ஸ்மார்ட்போனாக ஆக்குகின்றன. இதையே நாம் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்: இது ஹை ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளே, பெரிய பேட்டரி மற்றும் இன்னும் நல்ல கேமரா செட்டப் உடன் வரலாம். குறிப்பாக ரியல்மி இந்த ஸ்மார்ட்போனின் விலையை போட்டி தன்மையுடன் வைத்திருந்தால், நார்சோ 100 லைட் 5ஜி ஆனது என்ட்ரி லெவல் பிரிவில் தனது போட்டியாளர்களை விட ஒரு படி மேலே இருக்கும்!


Click it and Unblock the Notifications








