Home
Gadgets

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? 150 இன்ச்.. 3200mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம் தனது புதிய எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (XElectron PocketBeam smart projector) மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் சிறிய வடிவமைப்பு, தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron PocketBeam projector Specifications): 720P HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080P டிகோடிங் சப்போர்ட் (1080P decoding support) வழங்குகிறது இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் 6000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness)வசதி இதில் உள்ளது.

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? 150 இன்ச்.. அறிமுகமானது புதிய ப்ரொஜெக்டர்..

இதுதவிர 40,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடல்.

குறிப்பாக எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மூலம் 150 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 75-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.

ரிமோட் ஃபோகஸ் (Remote Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புத்தம் புதிய எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம்.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் ஸ்கிரீன் மிரரிங்கை (Screen Mirroring) ஆதரிக்கிறது இந்த எக்ஸ்எலக்ட்ரான் ப்ரொஜெக்டர். அதுவும் இதில் ஏர்பிளே (Airplay) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுகள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் இயங்குகிறது. பின்பு நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? 150 இன்ச்.. அறிமுகமானது புதிய ப்ரொஜெக்டர்..

டூயல் பேண்ட் வைஃபை புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. அதேபோல் 3200எம்ஏஎச் பேட்டரி உடன் எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக இயங்கும் .

எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலின் விலை ரூ.9,990-ஆக உள்ளது. இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
XElectron PocketBeam Projector launched in india check specification price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X