Home
How to

இனி கூகுள் மேப்ஸில் டைப் செய்யாமல் பேசலாம்.. Ask Maps பயன்படுத்துவது எப்படி.. இதோ வழிமுறைகள்..

கூகுள் மேப்ஸ் செயலியை இந்தியாவில் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் கூகுளின் மேம்பட்ட AI மாடலான ஜெமினி மூலம் இயங்கும் Ask Maps வசதி ஆனது தற்போது இந்தியப் பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த Ask Maps வசதி மூலம் பயனர்கள் வெறும் இடங்களைத் தேடுவதோடு நின்றுவிடாமல், அந்த இடங்களைப் பற்றிய முக்கியமான கேள்விகளைக் கேட்டு உடனடி பதில்களைப் பெற முடியும். அதுவும் இந்த வசதி இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி கூகுள் மேப்ஸில் டைப் செய்யாமல் பேசலாம்.. Ask Maps..

Ask Maps கூகுள் மேப்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒரு உரையாடல் சார்ந்த AI (Conversational AI) தேடல் வசதியாகும். நீங்கள் ஒரு உணவகத்தின் பெயரையோ அல்லது ஊரின் பெயரையோ தட்டச்சு செய்து தேடுவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் நண்பரிடம் கேட்பது போல கேள்விகளைக் கேட்கலாம்.

உதாரணமாக எனது நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிட அமைதியான, அதேசமயம் இசை வசதி கொண்ட ஒரு இடம் எங்கே உள்ளது என்று கேட்டால் கூகுள் மேப்ஸ் தனது வசம் உள்ள கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து உங்களுக்கு மிகச்சரியான இடத்தைப் பரிந்துரைக்கும்.

அதேபோல் புதிய வசதியின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், பயனர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களைப் பற்றி சாதாரண மொழியில் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணமாக அருகில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட கஃபே எங்கு உள்ளது? குறைவான கூட்ட நெரிசல் கொண்ட உணவகங்கள் எவை?" என்று கேட்டால் போதும் ஜெமினி மூலம் துல்லியமான பதில்களைக் கூகுள் மேப்ஸ் எளிதாக வழங்கிவிடும்.

இந்த Ask Maps வசதியில் விடுமுறை நாட்களுக்கான முழுமையான பயணத் திட்டத்தை வகுத்துத் தரும்படி பயனர்கள் கேட்கலாம். குறிப்பாக இதில் 30 கோடிக்கும் அதிகமான இடங்கள் மற்றும் 50 கோடிக்கும் மேலான பயனர்களின் மதிப்புரைகள் அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்படும். சரி இப்போது Ask Maps வசதியைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

Ask Maps பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

1.முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

2. அடுத்து நீங்கள் கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து Search Bar அருகே Ask Maps அல்லது ஜெமினி சின்னம் இருப்பதைப் பார்க்க முடியும். அதைக் கிளிக் செய்தவுடன் ஒரு Chat Box திறக்கும்.

3.அதன்பின்னர் உங்களுக்குத் தேவையான தகவல்களை டைப் செய்யலாம் அல்லது Voice Command மூலமாகவும் கேட்கலாம். குறிப்பாக நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்ப, அந்த இடத்தின் தரம், மற்ற பயனர்களின் விமர்சனங்கள், அங்கே கிடைக்கும் வசதிகள் மற்றும் நேரலை புகைப்படங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான அறிக்கையை இந்த AI வசதி உங்களுக்கு வழங்கும்.

இனி கூகுள் மேப்ஸில் டைப் செய்யாமல் பேசலாம்.. Ask Maps..

4. குறிப்பாக இது இது சாதாரணத் தேடலை விட மிகத் துல்லியமான முடிவுகளைத் தருகிறது.

அதுவும் Ask Maps வசதி ஆனது வெறும் இடங்களைக் காட்டுவது மட்டுமின்றி அந்த இடத்தை பற்றிய சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட சுற்றுலாத் தளம் அல்லது வணிக வளாகத்திற்கு செல்வதற்கு முன்பு அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் என்ன, வாகன நிறுத்துமிட வசதி எப்படி இருக்கிறது போன்ற நுணுக்கமான தகவல்களையும் இது பட்டியலிடுகிறது. உங்கள் முந்தைய தேடல்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளையும் இது வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps launches Ask Maps in India: Heres how to use it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X