Home
Mobile

அசூர விற்பனை.. ரூ.16000 பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?

இந்தியாவில் டூயல் அமோலெட் டிஸ்பிளே கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட லாவா பிளேஸ் டுயோ 3 5ஜி (Lava Blaze Duo 3 5G) ஸ்மார்ட்போனானது, இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல் சோனி சென்சார் கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.17,949ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,499 விலைக்கு இந்த லாவா பிளேஸ் டுயோ 3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். விரிவான பீச்சர்களை பார்க்கலாம்.

அசூர விற்பனை.. ரூ.16000 பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. SONY கேமரா!

லாவா பிளேஸ் டுயோ 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 3 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (Octa Core 6nm MediaTek Dimensity 7060) மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த லாவா பிளேஸ் டுயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பஞ்ச்-ஹோல் அமோலெட் (Punch-Hole AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. மேலும், 800 நிட்ஸ் எச்பிஎம் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது. 1.6 இன்ச் (320 x 360 பிக்சல்கள்) செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் 18Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த செகண்டரி டிஸ்பிளேவை வியூஃபைண்டராகவும் பயன்படுத்தி கொள்ளலாம். நோட்டிபிகேஷன்கள், மியூசிக் கன்ட்ரோல்கள், வாட்ச்பேஸ்கள் உள்ளிட்டவை வருகின்றன. 6 ஜிபி ரேம் + 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + கியூவிஜிஏ (QVGA) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த லாவா பிளேஸ் டுயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. நைட் மோட், டூயல் வீடியோ உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh லித்தியம்-பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. 35 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் & டைப்-சி ஆடியோ உள்ளது. இந்த பேட்டரியுடன் 7.55 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. 181 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் மாடலாக எதிர்பார்க்கலாம்.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்டை இந்த லாவா பிளேஸ் டுயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze Duo 3 5G With 50MP Camera Available At Rs 1500 Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X