Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?

|

மக்களை இணைக்கும் செயலிகள் பல வடிவங்களில் அனைத்து காலகட்டங்களிலும் இருந்து வருகின்றன. உதாரணமாக ஈமெயிலில் (email) ஆரம்பித்து, இப்போது பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (Whatsapp), இன்ஸ்டாகிராம் (Instagram) என்று அனைத்துமே மக்களை இணைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட செயலிகளாக திகழ்கின்றன.

அந்த வகையில், சமீப காலமாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதல் இடத்தை பிடித்துள்ள ஆப்ஸ் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இன்ஸ்டாகிராமில் திறமைகளை காட்டுவது, எண்ணங்களைப் பகிர்வது போன்ற பல அம்சங்களுடன் சேர்த்து, சாட்டிங் செய்வதற்கான அம்சமும் இதில் உள்ளது.

Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா?

இன்ஸ்டாகிராமில் Unsend செய்த மெசேஜ்களை மீண்டும் படிக்க முடியுமா?

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற தளங்களில் மெசேஜ்ஜிங் செய்வது போல, இப்போது மக்கள் அவர்களுக்கு பிடித்தமானவர்களுடனும், நண்பர்களுடனும் உரையாட டெக்ஸ்ட் மெசேஜ்களை பெரிதும் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் இல் மெசேஜ்களை அனுப்பும் பொழுது, தவறுதலாக ஏதேனும் அனுப்பிவிட்டால் அதனை டெலிட் (delete) செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

அதேபோல இன்ஸ்டாகிராமில் உள்ள டைரெக்ட் மெசேஜ் (Direct Message) அம்சம் மூலம், மெசேஜ்களை அனுப்பும் பொழுது, தவறுதலாக ஏதேனும் அனுப்பிவிட்டால், அதனை அன்சென்ட் (unsend) செய்துகொள்ளும் விருப்பம் இன்ஸ்டாகிராமில் உள்ளது. இது நம்மில் இருக்கும் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும்.

ஒருவர் நமக்கு ஏதோ ஒரு மெசேஜ்ஜை அனுப்பிய பின், அதை அன்சென்ட் செய்து விட்டால், அந்த மெசேஜ்ஜில் என்ன செய்தி இருந்தது என்று தெரிந்துகொள்ள நமக்கு ஆர்வமாக இருக்கும். இது இயல்பாக அனைவருக்கும் இருக்கும் ஒரு எண்ணம் தான். ஆனால், ஒருமுறை இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜ்ஜை அன்சென்ட் செய்துவிட்டால், அதில் என்ன தகவல் இருந்தது என்று நமக்குத் தெரியாது.

Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா?

இப்படி செய்தால் அன்சென்ட் செய்யப்பட்ட Instagram மெசேஜ்களை திரும்ப பெறலாமா?

இது நார்மலாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் யூஸர்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனால், சில ட்ரிக்கை நீங்கள் பயன்படுத்தினால், உங்களால் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ் தகவலை இன்ஸ்டாகிராமில் மீண்டும் பார்க்க முடியும் என்பதே உண்மையாகும். அப்படி, இன்ஸ்டாகிராமில் நமக்கு அனுப்பப்பட்ட மெசேஜ் அன்சென்ட் செய்யப்பட்டுவிட்டால் அதனை எப்படி பார்ப்பது என்பது பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

- இதற்கு முதலில் நீங்கள் ஒரு தேர்ட் பார்ட்டி (Third Party) ஆப்ஸை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
- Google Play Store-ல் இருந்து நோட்டிசேவ் (NotiSave) என்ற ஆப்சை டவுன்லோட் (Download) செய்யவும்.
- பிறகு அதை உங்கள் போனில் இன்ஸ்டால் (Install) செய்து கொள்ள வேண்டும்.
- இன்ஸ்டால் செய்யப்படும் பொழுது அலோ ஆக்ஸஸ் டு நோட்டிஃபிகேஷன் (Allow access to notification?) என்று ஒரு கேள்வி டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும்.
- இதற்கு அலோ (Allow) என்று அனுமதி கொடுக்க வேண்டும்.
- பின்னர் டிஸ்பிளேவின் கீழே இருக்கும் மூன்று புள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- அப்படி தேர்வு செய்யும் பட்சத்தில் பிளாக் நோட்டிபிகேஷன் (Block Notification), எடிட் குரூப் (Edit group), செட்டிங்ஸ் (Settings) என்று மூன்று தேர்வுகள் தோன்றும்.
- அதில் எடிட் குரூப் என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா?

- எடிட் குரூப்பை தேர்வு செய்யும்போது, அதன் கீழ் மெசேஜஸ் (Messages), அன்ரெட் நோட்டிஃபிகேஷன் (Unread Notification), சேவ்டு நோட்டிஃபிகேஷன் (Saved Notification) என்று மூன்று தேர்வுகள் இருக்கும்.
- அதில் மெசேஜஸ் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
- மெசேஜை தேர்வு செய்த பின்னர் மெசேஜ் அனுப்பும் அம்சங்கள் கொண்ட செயலிகளின் பட்டியல் காட்டப்படும்.
- அதில் இன்ஸ்டாகிராம் என்ற தேர்வை ஆன் (On) செய்ய வேண்டும்.
- அவ்வளவு தான் இனி உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் வரும் மெசேஜ் ஏதாவது அன்சென்ட் செய்யப்பட்டால், அது இந்த நோட்டிசேவ் ஆப்ஸில் சேவ் செய்யப்படும்.
- அதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த ஆப்ஸ் மூலம் வாட்ஸ்அப் இல் டெலீட் செய்த மெசேஜ்களையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். இது மெசேஜ் விபரம் மட்டுமின்றி அன்சென்ட் செய்யப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ பைல்களையும் சேவ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோட்டிசேவ் ஆப்ஸ் ஒரு தேர்ட் பார்ட்டி (Third Party) என்பதனால், உங்களது சொந்த விருப்பத்தின் பெயரில் மட்டுமே இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to recover and read Unsend direct messages from Instagram Apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X