YouTube வீடியோவை இவ்வளவு ஈஸியா டவுன்லோட் செய்யலாமா? இது தெரியாம போச்சே.!

|

ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்துவோர் அனைவரும் கட்டாயமாக யூடியூப் (YouTube) சேவை பயன்படுத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில், யூடியூப் பயன்படுத்தாத ஆட்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி நீங்களும் அதிகமாக யூடியூப் பயன்படுத்தப்படும் நபர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இந்த ட்ரிக்கை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக ட்ரை செய்து பார்க்க வேண்டும்.

YouTube வீடியோவை இவ்வளவு ஈஸியா டவுன்லோட் செய்யலாமா? இது தெரியாம போச்சே

யூட்யூபில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை (YouTube Video) பார்க்கும் பொழுது, அவற்றை சில நேரங்களில் டவுன்லோட் (Download) செய்ய விருப்பப்படுவீர்கள். ஆனால், யூட்யூபில் நேரடியாக டவுன்லோட் (YouTube Video Download) செய்யும் விருப்பம் கிடையாது. YouTube இல் இருக்கும் டவுன்லோட் அம்சம் நீங்கள் விரும்பும் வீடியோவை யூடியூப் தளத்தில் மட்டுமே டவுன்லோட் செய்து சேவ் செய்ய அனுமதிக்கிறது. ஆனால், இது உங்கள் போன் கேலரியில் (Phone Gallery) காண்பிக்கப்பட மாட்டாது.

இது ஒரு குறைபாடாக இருக்கிறது. இப்படி யூடியூப் வீடியோவை பதிவிறக்கம் செய்யப் பல சிக்கல்கள் இருக்கும் போதிலும், எளிமையாகவும், இலவசமாகவும் YouTube வீடியோவை டவுன்லோட் (Free YouTube Video Downloader) செய்வதற்கு சில வழிகள் உள்ளது. அதைத்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்காகவே என்று ஒரு தனி மொபைல் ஆப்ஸை (mobile apps) நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை.

இங்கு நாங்கள் கூறப்போகும் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றினால், இனி youtube வீடியோக்களை எளிமையாக உங்கள் போனில் நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

YouTube வீடியோவை இவ்வளவு ஈஸியா டவுன்லோட் செய்யலாமா? இது தெரியாம போச்சே

- முதலில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான YouTube வீடியோவை கிளிக் செய்து பார்க்க வேண்டும்.
- அதன் பின் அந்த வீடியோவின் URL லிங்கை காப்பி (Copy) செய்ய வேண்டும்.
- இப்பொழுது, உங்கள் Google Chrome பிரவுசர் சென்று சேவ் ஃப்ரம் நெட் (Save From Net) என்று டைப் செய்யுங்கள்.
- உங்களுக்கு காண்பிக்கப்படும் இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
- பின்பு அங்கிருக்கும் URL பேஸ்ட் பாக்ஸில் நீங்கள் காப்பி செய்த வீடியோ லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்.
- அருகில் இருக்கும் டவுன்லோட் பட்டனை அழுத்த வேண்டும்.
- உங்களுக்கு என்ன சைஸில்? என்ன குவாலிட்டியில்? அந்த வீடியோ டவுன்லோட் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பம் காண்பிக்கப்படும்.
- அதை கிளிக் செய்து OK மட்டும் கொடுங்கள்.
- ஆட்டோமேட்டிக்காக உங்களுடைய வீடியோ போனில் டவுன்லோட் செய்யப்பட்டு சேவ் செய்யப்படும்.
- இது உங்களுடைய கேலரியின் டவுன்லோட் போல்டரில் காண்பிக்கப்படும்.

Youtube வீடியோவை இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு மற்றொரு வழிமுறை என்றால், கட்டாயம் நீங்கள் டெலெக்ராம் ஆப்பை (Telegram Apps) பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் பெரும்பாலானோர் இப்போது டெலகிராம் ஆப்பை பயன்படுத்துகின்றனர். இந்த ஆப்ஸ் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டுள்ளது. அதில் ஒரு முக்கியமான அம்சம் தான் யூடியூப் டவுன்லோடர் பாட் (YouTube Downloader Bot).

- உங்கள் டெலெக்ராம் ஆப்ஸை ஓபன் செய்து சர்ச் பாரில் யூடியூப் டவுன்லோடர் பாட் என்று டைப் செய்யுங்கள்.
- இப்பொழுது, ஸ்டார்ட் என்பதை கிளிக் செய்து அந்த பாட் இன் உதவியை நாடவும்.
- பின்பு நீங்கள் விரும்பும் வீடியோ லிங்கை (YouTube Video Link) அங்கு பேஸ்ட் செய்யவும்.
- அவ்வளவுதான் உங்களுடைய YouTube வீடியோ தானாக டவுன்லோடு செய்யப்பட்டு போனில் சேவ் செய்யப்படும்.

இந்த முறைகளை பின்பற்றி நீங்கள் உங்கள் விருப்பமான யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் உடனே ட்ரை செய்து பாருங்கள்.

Best Mobiles in India

English summary
How To Download YouTube Videos Directly Without Using Any Mobile Apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X