ஆண்ட்ராய்டு போன்களில் ஆட்டோ கரெக்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

By Venkatakishnan S

  நம் சமூகத்தில் இதற்கு முன்பு இப்படி ஒரு தனிமனித சுதந்திரமும், குரலும் எதிரொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. அதிகபட்சம் வீட்டிலும், வெளியில் உறவினர் மற்றும் நட்பு வட்டத்தில் நம் குரலை பதிவு செய்வதோடு சரி. பேச்சாளர் அல்லது எழுத்தாளராக இருந்தால் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பேச்சை, எழுத்தை பொது மேடைகளில் பதிவு செய்யலாம் அவ்வளவு தான். ஆனால் இன்று அப்படி அல்ல முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் எழுதும் அத்தனை பேரும் தங்கள் கருத்தை, குரலை பதிவு செய்து உலகமெங்கும் பரவச் செய்யும் பாக்கியத்தை பெற்றுள்ளார்கள். அதில் உள்ள குறை, நிறையை பற்றி இங்கே நாம் விவாதிக்கப் போவது இல்லை.

  ஆண்ட்ராய்டு போன்களில் ஆட்டோ கரெக்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  ஒரு மொழியை பேசுவதற்கும் எழுவதற்கும் தனித்தனி திறமைகள் தேவை. தெளிவாக பேசுவோர் கூட தப்பில்லாமல் எழுதி விட முடியாது. அதே போல் திறமையாக எழுதுவோர் பலருக்கு கோர்வையாக பேசவும் வராது. பொதுவான கருத்து இப்படி இருக்க இன்றைய ஆன்டராய்ட் உலகில் ஆங்கிலம் மற்றும் தமிழில் குறுஞ்செய்திகளும், வாட்ஸ் தகவலும், சமூக வலைதளங்களுக்கான போஸ்ட்களும், மீம்சுகளும் தான் அதகளப்படுகின்றன. ஆனால் அத்தகைய செய்திகளை நம் எந்த மொழியில் அனுப்பினாலும் பிழையின்றி பதிவு செய்கிறோமா என்பது தான் கேள்வி?

  ஆண்ட்ராய்டு போன்களில் ஆட்டோ கரெக்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  ஆனால் இன்றைய ஆண்ட்ராய்டு போன்களில் "Auto Correct" என்கிற அம்சம் அதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, பலரும் பிழையின்றி தட்டச்சு செய்ய பரவலாக பயன்படுகிறது. தேவையான இடத்தில் தேவையான வார்த்தைகளை பிரயோகிக்க அதுவும் தவறின்றி பிரயோகிக்க இந்த ஆட்டோ கரெக்ட் அம்சம் பெரிதும் உதவுகிறது.

  ஏற்கனவே மொழிக்கான அகராதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தோடு இணைந்துள்ளதால் நாம் தட்டச்சு செய்யும் போது நினைவுக்கு வராத வார்த்தைகளை கூட இந்த ஆட்டோ கரெக்ட் அம்சம் நமக்கு தந்து உதவுகிறது.

  மேலும் அது பிழையில்லாத வார்த்தைகள் எனும் போது நிச்சயம் வரவேற்கப் பட வேண்டிய அம்சமாக கருதப்படுகிறது. நாம் ஒரு வார்த்தை பிழையாக தட்டச்சு செய்தாலே கீழே சிவப்பு கோடிட்டு அந்த பிழை சுட்டிக்காட்டப்படுவதால் நாம் எந்த சிந்தனையில் தட்டச்சு செய்தாலும், நம் தட்டச்சில் நிகழும் தவறை சுட்டிக்காட்ட பெரிதும் பயன்படுகிறது.

  இதைத் தாண்டி நாம் அடிக்கடி பயன்படுத்தும் நமது சொந்த வார்த்தைகளை கூட நம்முடைய சொந்த அகராதியாக (personal dictionary) சேமித்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் (Wrap Up Autocorrect feature) உள்ளது. இதனால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்யவேண்டிய அவசியமும் இல்லை. நேரவிரயமும் தவிர்க்கப் படுகிறது.

  How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
  பெரும்பாலும் ஆண்ட்ராய்டு போனில் நம் சொந்த வார்த்தைகள் அடங்கிய அகராதி வசதி இயல்பாக இணைந்துள்ளது. ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும் தட்டச்சு செயலியில் அந்த வசதி இல்லையென்றால் கீழ் கண்ட முறையில் அதை இணைத்துக் கொள்ளலாம்.

  Step 1: Go to "Settings."

  Step 2: Tap on "Language and Input."

  Step 3: Select "Personal Dictionary" and then tap on the plus sign. You can now add your word to the personal dictionary now.

  மேற்கண்ட முறையில் நீங்கள் உங்கள் சொந்த வார்த்தைகள் அடங்கிய அகராதியை இணைத்துக் கொள்ளலாம்.

  ஆண்ட்ராய்டு போன்களில் ஆட்டோ கரெக்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  சிலருக்கு இந்த "Auto Correct" வசதியின்றி விரைவாக டைப் செய்ய உதவுகிறது என்று நினைத்து இந்த வசதி தேவையில்லை என்று நினைக்கலாம்.

  "Auto Correct" வசதி தேவையில்லாத போது எப்படி நீக்குவது?

  Step 1: Go to "Settings."

  Step 2: Tap on "Language and Input."

  Step 3: Select "Google Keyboard" and then choose "Text Correction."

  Step 4: Toggle off autocorrect.

  மேலே உள்ள வழிகளை கொண்ட மீண்டும் "Auto Correct" வசதியை செயல்படுத்தி கொள்ளவும் முடியும்.

  ஆண்ட்ராய்டு போன்களில் ஆட்டோ கரெக்ட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  தொழில்நுட்பம் என்பதை நம் தேவைக்காக நாம் உருவாக்குபவை தான். சிலருக்கு அது உபயோகமாகவும், அதுவே சிலருக்கு உபத்திரமாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது நம் தேவை, பயன்படுத்தும் மனப்பான்மையை பொறுத்தது. ஆனால் எதையும் தெரிந்து கொண்டு வைத்திருப்பது அவசியம் தான்.

  English summary
  Heres How You Can Use Personalized Autocorrect Feature On Android; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more