Home
Mobile

இந்தியாவே இதுக்காகத்தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. 7000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

சமீபத்தில் இந்தோனேசியாவில் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய விவோ போனின் இந்திய விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட தகவலின்படி, ரூ.30,000 பட்ஜெட்டில் புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகாகும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவே இதுக்காகத்தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் விவோ வி70 எப்இ போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.83 இன்ச் இன்ச் Q10+ அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த புதிய விவோ போனில் உள்ளது.

இந்தியாவே இதுக்காகத்தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த போனில் உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.4, யூஎஸ்பி டைப்-சி போர்ட், என்.எஃப்.சி, ஜி.பி.எஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V70 FE price leaked ahead of India launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X