அடுத்த Xiaomi 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் சமீபத்தில் சியோமி 17 (Xiaomi 17) மற்றும் சியோமி 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சியோமி 17டி (Xiaomi 17T) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். அதாவது இந்த போன் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சியோமி 17டி அம்சங்கள் (Xiaomi 17T Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சிப்செட் (MediaTek Dimensity 8500 chipset) உடன் இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த புதிய சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி செகண்டரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் எனறு கூறப்படுகிறது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி 17டி போன் வெளியாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6500mAh பேட்டரி உடன் இந்த சியோமி 17டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உளளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி 17டி போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி போன் ரூ.55,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








