Home
Mobile

மார்ச் 19 வரை வெயிட் பண்றவங்க புத்திசாலி.. 7000mAh பேட்டரி, 5ஜி.. பட்ஜெட்டில் புது Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆன ரியல்மி பி4 சீரீஸில் "ஒரு புதிய சாதனையை" செய்யவுள்ளது. இந்த சீரீஸின் கீழ் ஏற்கனவே ரியல்மி பி4, ரியல்மி பி4 ​​ப்ரோ, ரியல்மி பி4எக்ஸ், ரியல்மி பி4 ​​பவர் மற்றும் ரியல்மி பி4 ​​லைட் 4ஜி உள்ளிட்ட 5 மாடல்கள் உள்ளன.

இதற்கிடையில் இந்நிறுவனம் இதே சீரீஸின் கீழ் ரியல்மி பி4 ​​லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது முன்னதாக வெளியான ரியல்மி பி4 ​​லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் "5ஜி வேரியண்ட்" ஆகும்.

7000mAh பேட்டரி, 5ஜி.. பட்ஜெட்டில் புது Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி பி4 ​​லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த் ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் வழியாக, இதன் பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் டிசைன் குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி (சுவாரசியமாக) இது வெறுமனே "4ஜி டூ 5ஜி" அப்கிரேட்-ஐ மட்டுமே வழங்குவது போல் தெரியவில்லை. இது 4ஜி வேரியண்ட்டை விட சற்று பெரிய 7000mAh பேட்டரியை கொண்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதன் 4ஜி வேரியண்டிலிருந்து மிகவும் வித்தியாசமாகவும் தெரிகிறது.

ரியல்மி பி4 ​​லைட் 4ஜி ஸ்மார்ட்போனில் உள்ள சதுர வடிவ வடிவமைப்பிற்கு (Square-shaped design) மாறாக, இது செங்குத்தாக அடுக்கப்பட்ட கேமரா மாட்யூலை (Vertically-stacked camera module) கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல்-டோன் வடிவமைப்பையும் கொண்டுள்ளது, இது "பட்ஜெட் விலையில்" மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக தெரிகிறது.

பேட்டரி மற்றும் டிசைன் தவிர்த்து, ரியல்மி பி4 ​​லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் வேறு எந்த விவரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கு அறிமுகமானது; இப்போதும் கூட இதே விலைக்கு தான் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை, இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக காணப்படும் யுனிசாக் டி7250 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்கான செயல்திறன் மேம்பாட்டு அம்சமான ஜிடி மோட்-ஐ (GT Mode) வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கப்பட்ட 6300mAh பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ கொண்டு இயங்குகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி ரியல்மி நிறுவனம் அதன் பி4 லைட் 4ஜி மாடலை ரூ.10,000க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அதை 5ஜி வேரியண்ட் ஆனது நிச்சயம் அதிக விலை கொண்டதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்போது சந்தையில் நிலவும் சூழ்நிலை இதை சற்று அதிக விலைப்பிரிவில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இப்போதைக்கு, இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் அதன் 7,000mAh பேட்டரியாகவே தெரிகிறது. மேலதிக விவரங்கள் அல்லது முக்கிய அம்சங்கள் வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படலாம். ஏனென்றால் வெளியீட்டு நாளிற்கு மிகவும் குறைவான நாட்களே பாக்கி உள்ளன. ஆக பட்ஜெட் விலையில் ஒரு பெரிய பேட்டரி மற்றும் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனை தேடுபவர்கள் அல்லது வாங்க திட்டமிடுபவர்கள் -கே கொஞ்ச நாள் காத்திருந்து ரியல்மி பி4 லைட் 5ஜி மாடலை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme P4 Lite 5G With 7000mAh Battery Dual Tone design All Set to Launch in India On March 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X