மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை மட்டும் செய்தால் எப்பவும் Battery Full தான்!

|

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு பிரதான பிரச்சனை Battery Charging என்பது தான். எத்தனை முறை முழுமையாக சார்ஜ் செய்தாலும் அடுத்த சில நிமிடங்களில் பேட்டரி ஆயுள் பூஜ்ஜியத்தை தொட்டு விடுகிறது, இதற்கு என்ன தீர்வு என பலரும் யோசிப்பது உண்டு. இந்த சிக்கலை சந்திக்கும் பலரும் புது போனை நோக்கி ஓடுவார்கள். இனி அப்படி செய்ய வேண்டாம். உங்கள் பழைய போனில் இந்த முறையை கடைபிடித்தால் உங்கள் பேட்டரி ஆயுள் தானாக நீட்டித்து வழங்கப்படும்.

மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை செய்தால் Battery Full தான்!

ஸ்மார்ட்போன் பேட்டரியில் கவனம் தேவை

ஸ்மார்ட்போனில் பேட்டரி என்பது மிக பிரதானம், இதை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் பயன்படுத்துவது எந்த ஸ்மார்ட்போனோ அதற்கு ஏற்ற சார்ஜரை தான் உங்கள் போனில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போனை சூடாகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி போன் சூடாக இருந்தால் அதற்கு காரணம் பேட்டரி மட்டும் தான்.

அடிக்கடி ரீஸ்டார்ட் செய்யவும்

ஸ்மார்ட்போனின் தகுதிக்கு மீறிய அம்சங்களை அதில் தொடர்ந்து பயன்படுத்தினால் சூடாகும். பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கி அதில் ப்ரீமியம் தர ஸ்மார்ட்போனில் உபயோகிக்கும் அம்சங்களை பயன்படுத்தினால் இந்த சிக்கல் ஏற்படும். அதேபோல் ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது நல்லது.

சார்ஜ் குறைவதற்கு காரணம்

ஸ்மார்ட்போனை பயன்படுத்தவே இல்லை, காலை சார்ஜ் போட்டு அலுவலகம் செல்கிறேன் மாலை பார்த்தால் பேட்டரி ஆயுள் அடிமட்டத்துக்கு குறைந்துவிடுகிறது போன்ற சிக்கலை பலர் சந்திக்கின்றனர். இதற்கும் காரணம் இருக்கிறது. அது பல செயலிகள் ஸ்மார்ட்போனின் Background இல் ரன் ஆகிக் கொண்டிருப்பது தான். நீங்கள் டவுன்லோட் மட்டும் செய்தால் போதும் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.

உங்களுக்கு ஒரு செயலியில் இருந்து தொடர்ந்து நோட்டிபிகேஷன் வந்துக் கொண்டிருக்கிறது என்றால் அது எப்படி? அந்த ஆப்ஸ் உங்கள் மொபைல் Background இல் தொடர்ந்து ரன் ஆகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். முதலில் உங்கள் மொபைலில் தேவையில்லாமல் இருக்கும் ஆப்ஸ்களை டெலிட் செய்துக் கொள்ளுங்கள். Background இல் ரன் ஆகும் அப்ஸ்களை தெரிந்துக் கொள்வது எப்படி, அதை நிறுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை செய்தால் Battery Full தான்!

1-வது வழிமுறை

  • உங்கள் மொபைலை எடுத்து செட்டிங்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து கொள்ளுங்கள், இதில் உள்ள சிஸ்டம் என்ற விருப்பத்தை திறந்தால் Developer Options என்ற தேர்வு காட்டப்படும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
  • Developer Options என்ற விருப்பத்துக்குள் சென்றதும் அதில் Running Services என்ற விருப்பம் காட்டப்படும். அதற்குள் சென்றால் ஒவ்வொரு ஆப்ஸ்களும் எத்தனை ரேம் பவரை எடுத்துக் கொள்கிறது. எவ்வளவு நேரம் ரன் ஆகிறது என காட்டப்படும். இதன்மூலம் பேக்கிரவுண்ட் இல் ரன் ஆகும் ஆப்ஸ் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

2-வது வழிமுறை

  • அதேபோல் ஸ்மார்ட்போனின் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று கொள்ளவும். அதில் உள்ள பேட்டரி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
  • பேட்டரி விருப்பம் எங்கு இருக்கிறது என தெரியிவில்லை என்றால் செட்டிங்க்ஸ் ஆப்ஷனில் மேலே காட்டப்படும் தேடல் விருப்பத்தில் பேட்டரி என டைப் செய்து தேடலாம்.
  • பேட்டரி என்ற பயன்பாட்டுக்குள் சென்று பேட்டரி யூசேஜ் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதில் உங்கள் மொபைலின் பேட்டரி எந்தெந்த ஆப்ஸ்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என காட்டப்படும். இதன்மூலம் எந்த ஆப்ஸ் காரணமாக உங்கள் பேட்டரி அதிகம் செலவாகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

3-வது வழிமுறை

  • சரி, எந்தெந்த ஆப்ஸ் பேக்கிரவுண்ட் இல் ரன் ஆகிறது. எந்த ஆப்ஸ் காரணமாக உங்கள் மொபைலில் அதிக பேட்டரி செலவாகிறது என்பதை கண்டறிந்த உடன் என்ன செய்வது என பார்க்கலாம்.
  • உங்களுக்கு அந்த ஆப்ஸ் தேவையில்லை என்றால் உடனே அன்-இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
  • அப்படி அந்த ஆப்ஸ் தேவை இருக்கும் பட்சத்தில் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று ஆப்ஸ் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். இதில் அனைத்து ஆப்ஸ்களும் காட்டப்படும்.
  • உங்களுக்கு தேவையில்லாத ஆப்ஸை கிளிக் செய்து ஓபன் செய்யவும். அதில் காட்டப்படும் Force Stop என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்தால். உங்கள் மொபைலின் Background இல் ரன் ஆவது நிறுத்தப்படும்.
மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை செய்தால் Battery Full தான்!

மொபைல் வெடிப்பதற்கான காரணம் என்ன?

மொபைல் வெடிப்பதற்கான காரணம் என்றால் அது மொபைலில் இருக்கும் பேட்டரியால் மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கும் வீக் ஆவதற்கும் பிரதான காரணங்களில் சார்ஜரும் ஒன்று. ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். எனவே வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சார்ஜர் என்பது மிக முக்கியம்

குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

Best Mobiles in India

English summary
Helps to Save Battery and Battery Life: How to Stop Background Running Apps on Android?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X