அட! இது தெரியாம போச்சே! மொபைல் வழியாக உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?

|

வாக்காளர் அடையாள அட்டையானது (Voter ID card) எவ்வளவு முக்கியமான ஒரு அடையாள சான்றிதழ் (ID Proof) என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.

அதற்காக ஒரிஜினல் (Original) வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது அதனுடைய ஜெராக்ஸையோ (Xerox) 24 மணி நேரமும் கையில் வைத்து சுற்றிக்கொண்டு இருக்க முடியாது! அது பாகாப்பானதாகவும் கூட இருக்காது அல்லவா?

இந்த சிக்கலை சரிசெய்யும் நோக்கத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையம் (Indian Election Commission) ஒரு எளிமையான தீர்வை (Solution) அறிமுகம் செய்தது.

அதென்ன தீர்வு?

அதென்ன தீர்வு?

கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தேசிய வாக்காளர் தினத்தை (National Voters Day) முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையமானது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளை (Digital Voter ID Card) வழங்க தொடங்கியது.

இ-வோட்டர் கார்டு (e-voter card) என்றும் அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையானது, உங்கள் அசல் வாக்காளர் அடையாள அட்டையின் டிஜிட்டல் வெர்ஷன் (Digital Version) ஆகும்.

இதை ஆன்லைன் (Online) வழியாக பதிவிறக்கம் (Download) செய்ய முடியும் என்பதால், ஒரிஜினல் வாக்காளர் அடையாள அட்டைக்கும், அதன் ஜெராக்ஸ் காப்பிகளுக்கும் இனி வேலை இல்லை என்று அர்த்தம்.

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

டிஜிட்டல் வோட்டர் ஐடி-ஐ எதில் எல்லாம் சேமித்து வைக்கலாம்?

டிஜிட்டல் வோட்டர் ஐடி-ஐ எதில் எல்லாம் சேமித்து வைக்கலாம்?

ஆன்லைன் வழியாக டவுன்லலோட் செய்யப்படும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஸ்மார்ட்போன் (Smartphone), கம்ப்யூட்டர் (Computer) மற்றும் லேப்டாப்பில் (Laptop) கூட சேமித்து வைக்க முடியும்.

மேலும் உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிலாக்கர் (DigiLocker) போன்ற டிஜிட்டல் லாக்கர் ஆப்களில் கூட சேமித்து வைக்கலாம்!

டவுன்லோட் செய்யப்பட்ட டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எடிட் செய்ய முடியுமா?

டவுன்லோட் செய்யப்பட்ட டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எடிட் செய்ய முடியுமா?

அதுமட்டுமின்றி டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையானது பிடிஎப் ஃபார்மெட்டில் (PDF Format) டவுன்லோட் ஆகும் என்பதால், அதை எந்தவொரு டிவைஸ் வழியாகவும்.. அதாவது மொபைல் / கம்ப்யூட்டர் / லேப்டாப் என எதன் வழியாகவும் அதை எடிட் (Edit) செய்ய முடியாது.

ஆக, உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைக்கு எந்தவிதமான பாதுகாப்பு சிக்கலும் ஏற்பாடாது.

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

ஆன்லைன் வழியாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆன்லைன் வழியாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்யும் முன் - 2 விஷயங்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

ஒன்று - உங்கள் மொபைல் எண் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒருவேளை இணைக்கப்படவில்லை என்றால், முதலில் அதைசெய்யவும். பின்னரே உங்களின் இ-வோட்டர் ஐடி-ஐ ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்ய முடியும்!

இரண்டாவது - டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் முன், ​​உங்களுடைய அசல் வாக்காளர் அடையாள அட்டையை கையில் வைத்திருக்கவும்; குறைந்தபட்சம் எலெக்ஷன் போட்டோ ஐடென்டிட்டி கார்டு (Election photo identity card - EPIC) நம்பரையாவது கையில் வைத்து இருக்க வேண்டும்.

எல்லாம் தயார் என்றால்.. கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

எல்லாம் தயார் என்றால்.. கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஏதேனும் ஒரு வெப் பரவுஸரை (Web Browser) திறக்கவும்.

- பின்னர் உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற அதிகாரப்பூர்வ இணையதளமான https://eci.gov.in/e-epic/ க்கு செல்லவும்.

- இப்போது டவுன்லோட் இ-இபிஐசி (Download e-EPIC) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- பிறகு, வெப் பேஜின் (Web Page) மேலே இ-இபிஐசி டவுன்லோட் பட்டனை (e-EPIC Download Button) கிளிக் செய்யவும்.

- நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் (Register) செய்து இருந்தால், உங்கள் லாக்- இன் விவரங்களை (Login Details) உள்ளிடவும். இல்லையெனில், மொபைல் நம்பரை கொண்டு ரிஜிஸ்டர் செய்யவும்.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது போர்ட்டலுக்குள் நுழையும் போது டவுன்லோட் இ-இபிஐசி என்கிற லிங்க்கை (Download e-EPIC link) கிளிக் செய்து, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் 10 இலக்க பிரத்யேக எண்ணான இபிஐசி நம்பரை (EPIC Number) டைப் செய்யவும்.

- பின்னர் உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் காட்டப்படும், உங்களை பற்றிய விவரங்களை சரிபார்க்கவும்.

- அதன் பிறகு, ஒடிபி-ஐ (OTP) பயன்படுத்தி உங்கள் மொபைல் நம்பரை வேலிடேட் (Validate) செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து கிடைக்கும் டவுன்லோட் இ-இபிஐசி (Download e-EPIC) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

அவ்வளவு தான். உங்களுடைய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையானது எடிட் செய்ய முடியாத பிடிஎப் ஃபைல் (PDF File) ஆக உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்படும்!

Best Mobiles in India

English summary
Follow This Simple Steps To Download Your Digital Voter ID Card Using Your Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X