இது தெரியாம போச்சே.! ஒரே கிளிக் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யலாம்!

|

சமூகவலைதளங்கள் என்பது பிரதான பயன்பாடாக மாறிவிட்டது. பொழுதுபோக்கு நோக்கத்தோடு அறிமுகமான இந்த சமூகவலைதளங்களில் தற்போது ஏணைய முக்கியத் தகவல்களை அறிந்துக் கொள்கிறோம். இதில் நாம் பார்க்கும் வீடியோக்களை பிறருக்கு பகிரவும், சேமித்து வைத்துக் கொள்ளவும் நினைத்திருப்போம். ஆனால் இது பெரிய வழிமுறைகள் என நினைத்து கடந்து சென்றிருப்போம். இனி அப்படி கடந்து செல்ல வேண்டாம்.

ஒரே கிளிக் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யலாம்!

இன்ஸ்டா, பேஸ்புக் வீடியோ டவுன்லோட்

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப் தளத்தில் ஒரே கிளிக் இல் எளிதாக வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம் இது அனைவரும் அறிந்தது. ஆனால் இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் அப்படி கிடையாது. இருப்பினும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இல் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை எளிதான முறையில் சேமித்துக் கொள்ளலாம். எந்தவொரு மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யாமல் சமூகவலைதள வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்.

உதவியாக இருக்கும் தளங்கள்

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வீடியோக்களை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை தான் பார்க்கப்போகிறோம். Savefromnet மற்றும் iGram போன்ற தளங்கள் இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற பயன்பாட்டில் இருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றன.

டவுன்லோட் செய்வது நல்ல முடிவு

ரீல்ஸ் மற்றும் ஷார்ட் வீடியோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவைகளில் நீங்கள் பார்த்து மகிழ்ந்த வீடியோக்களை இனி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து அவர்களையும் மகிழ்விக்கலாம். அந்த லிங்க்கை பகிர்ந்தாலே போதுமே என்ற கேள்வி வரலாம். ஆனால் அதை பதிவிறக்கம் செய்து அனுப்பவது என்பது இன்னும் சிறந்த முடிவாக இருக்கும். அந்த வீடியோ எப்போதும் உங்களிடமே இருக்கும். அடுத்தமுறை அதை பார்க்க விரும்பினால் தேட வேண்டிய தேவை இருக்காது.

சரி, வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயமும் இருக்கிறது. இதே முறையை பயன்படுத்தி நீங்கள் யூடியூப் வீடியோவையும் டவுன்லோட் செய்யலாம்.

ஒரே கிளிக் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யலாம்!

Instagram மற்றும் Facebook வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

 • இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளத்தை முதலில் ஓபன் செய்ய வேண்டும். இதில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவின் லிங்க்கை Copy செய்து கொள்ளவும்.
 • தற்போது க்ரோம் பயன்பாட்டை ஓபன் செய்து அதில் Savefrom.net என்ற இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளவும்.
 • இதில் டவுன்லோட் பிரிவு காட்டப்படும். அதில் நீங்கள் Copy செய்த லிங்க்கை Paste செய்யவும். பின் டவுன்லோட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
 • டவுன்லோட் என்பதை கிளிக் செய்ததும், நீங்கள் டவுன்லோட் செய்ய விருப்பம் தெரிவித்த வீடியோ டவுன்லோட் செய்வதற்கு தயாராகும். இதை செய்த உடன் விளம்பரம் காட்டப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி விளம்பரம் காட்டப்படும் பட்சத்தில் அதை க்ளோஸ் செய்து கொள்ளவும்.
 • பின் Download Mp4 என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதை கிளிக் செய்த உடனே உங்கள் வீடியோ பதிவிறக்கம் முறை தொடங்கப்படும்.
 • நீங்கள் பதிவிறக்கம் செய்த வீடியோ இப்போது உங்கள் சேமிப்பகத்தில் சேமிக்கப்படும்.

iOS

 • Instagram மற்றும் Facebook பக்கத்தை ஓபன் செய்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீல் அல்லது வீடியோவிற்கான லிங்க்கை Copy செய்து கொள்ளவும்.
 • பின் உங்கள் Safari உலாவியில் Savefrom.net என்ற இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளவும்.
 • டவுன்லோட் பிரிவில் நீங்கள் Copy செய்த லிங்க்கை Paste செய்து கொள்ளவும்.
 • தற்போது நீங்கள் டவுன்லோட் MP4 என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
 • டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்த உடன் உங்களுக்கு விளம்பரம் காட்டப்படலாம், அப்படி காட்டப்படும் பட்சத்தில் அதை க்ளோஸ் செய்து கொள்ளவும். தற்போது உங்கள் ஒரு பாப் அப் தோன்றும். இடதுபுறம் காட்டப்படும் பாப்அப் செய்யும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.
 • இதில் நீங்கள் வீடியோவை ஓபன் செய்து ஷேர் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். பின் Save என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். அவ்வளவுதான் உங்கள் வீடியோ ஆல்பத்தில் உள்ள iPhone இன் புகைப்படங்கள் பயன்பாட்டில் இருக்கும்.

இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் வீடியோக்களை ஏறத்தாழ இதே முறையில் igram என்ற தளத்தை பயன்படுத்தியும் ஓபன் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Easily download Short videos and reels from Instagram, Facebook by One Click: Do you know How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X