உஷார்., எச்சரிக்கை தகவல்: தப்பித் தவறி கூட whatsapp-ல இத பண்ணாதீங்க!

|

சமூகவலைதளங்களில் பிரதானமான ஒன்றாக கருதப்படுவது வாட்ஸ் ஆப், தற்போது வாட்ஸ் ஆப் என்பது மிக முக்கியமான செயலியாக உருவெடுத்துள்ளது. இந்த செயலி அலுவலகம் முதல் குடும்பங்கள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சம்

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு அம்சம்

சமூகவலைதளங்களை பொருத்த வரையில் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் பெரும்பாலானோர் தங்களது சுய விவரங்களை குறிப்பிட்டு இருப்பார்கள். இதன்மூலம் தங்களது அனுமதியின்றி தங்களது முழுவிவரங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளலாம். அதேபோல் தங்களின் போன் நம்பர் தெரிந்தால் போதும் நீங்கள் வைக்கும் ஸ்டேட்டஸ், புகைப்படம் என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் ஹேக்கர்கள் ஊடுருவலும் நடக்கலாம் எனவே பாதுகாப்பு என்பது மிக முக்கியம்.

அழைபேசி சேமிப்புகளை கண்காணிப்பது அவசியம்

அழைபேசி சேமிப்புகளை கண்காணிப்பது அவசியம்

உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கில் அனைவரையும் வரவேற்க வேண்டாம். உங்கள் காண்டெக்ட்டில் இருந்து பொருத்தமற்ற நபர்களை நீக்குவது நல்லது. அதேபோல் தேவையில்லாத நபர்கள் அல்லது முகம் தெரியாத நபர்களை பிளாக் செய்து வைப்பது நல்லது. அதேபோல் அவ்வப்போது தங்களது காண்டெக்ட்டில் தேவையில்லாம சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நம்பரை டெலிட் செய்வது நல்லது.

முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?

சுயவிவரம் புகைப்படம் என்பது அவசியம்

சுயவிவரம் புகைப்படம் என்பது அவசியம்

வாட்ஸ் ஆப்பில் டிபி, புரைபல் இமேஜ் எனப்படும் சுயவிவரப்படத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது சிறப்பு. அதேபோல் தங்கள் வைத்திருக்கும் படம் தங்களது முழுவிவரத்தையும் எடுத்துச் சொல்பனவாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சுயவிவரப் படத்தை யார் காணலாம் என்ற தனியுரிமை

சுயவிவரப் படத்தை யார் காணலாம் என்ற தனியுரிமை

ஏனெனில் உங்கள் வாட்ஸ் ஆப் சுயவிவர புகைப்படத்தை உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள அனைவராலும் காணலாம். இருப்பினும், உங்கள் சுயவிவர புகைப்படத்தை யார் காணலாம் என்பதற்கு தனியுரிமை விருப்பங்களும் உள்ளன.

மூன்று முறைகள் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்

மூன்று முறைகள் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்

எல்லோரும் (அதாவது அனைத்து வாட்ஸ் ஆப் பயனர்களும்), எனது தொடர்புகள் (உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள்) மற்றும் குறிப்பிட்ட நபர்கள் (இது எந்த புகைப்படத்தையும் காண்பிக்காது). இதன்மூலம் தங்களின் சுயவிவரப் புகைப்படத்தை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

ஸ்டேட்டஸ் பாதுகாப்பு அம்சம்

ஸ்டேட்டஸ் பாதுகாப்பு அம்சம்

ஸ்டேட்டஸ்-ல் நமது குடும்பத்தோடு வெளியே சென்றது, நண்பர்களோடு சென்றது என அனைத்தையும் பதிவிடுகையில் பாதுகாப்பு தேவை. இதை status with everyone என்று காண்பிக்கும். இதன்மூலம் தங்களது ஸ்டேட்டஸை அனைவரும் காணலாம்.

ஸ்டேட்டஸ் இதன்மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்

ஸ்டேட்டஸ் இதன்மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்

அதேபோல் தனது காண்டெக்ட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் தங்கள் காண்டெக்டில் உள்ளவர்கள் பார்க்கும் படி வைக்கலாம். அதேபோல் இதிலும் தேவையில்லாதவர்களை நிரந்தரமாக பிளாக் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்க்கும்படி அவர்களின் பெயரை டிக் செய்து வைக்கலாம்.

வாட்ஸ் ஆப் குரூப் பாதுகாப்பு அம்சம்

வாட்ஸ் ஆப் குரூப் பாதுகாப்பு அம்சம்

தங்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் யாரும் வேண்டும் இணைக்கும்படி பயன்படுத்த வேண்டாம். யாராவது ஒரு நபர் மூலமாக தேவையில்லா நபர்கள் குழுவில் வந்தால் அது மிகவும் ஊடுருவல்களை ஏற்படுத்தும். எனவே வாட்ஸ் ஆப் குழுவை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

போலி தகவல்களை பரப்ப வேண்டாம்

போலி தகவல்களை பரப்ப வேண்டாம்

காவல்துறையினர் விசாரணைப்படி ஒரு போலி தகவல் பரவினால் அது எந்த மொபைல் மூலம் பரவத் தொடங்கியது என்பதை ஐஎம்இஐ மூலம் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் எனவே பாதுகாப்பு தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மற்றும் பிறருக்கு பகிர்ந்து கொள்வது நல்லது.

512ஜிபி மெமரி வசதியுடன் களமிறங்கிய அசத்தலான கேலக்ஸி எஸ்10 லைட்.!

ஆபாச படம் மற்றும் வீடியோ விவகாரம்

ஆபாச படம் மற்றும் வீடியோ விவகாரம்

சமீபத்தில் ஆபாச படம் தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள சைபர் கிரைம் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது வாட்ஸ் ஆப் மட்டுமின்றி எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் ஆபாச படங்கள், வன்முறை வீடியோ, தடை செய்யப்பட்ட வீடியோ உள்ளிட்டவைகளை பகிர்ந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

ஒரே ஒரு வாட்ஸ்ஆப் குரூப்:  1000 ரூபாயை லட்சமாக மாற்றிய நபர்.! நடந்தது என்ன?

ஒரே ஒரு வாட்ஸ்ஆப் குரூப்: 1000 ரூபாயை லட்சமாக மாற்றிய நபர்.! நடந்தது என்ன?

ஆன்லைன் மூலம் சம்பாத்தியம் என்பது இப்போது டிரெண்டாகி கொண்டிருக்கிறது. 1000 ரூபாயை லட்சமாக மாற்றிய நபர், இதுபோன்ற செய்திகளை நாம் அவ்வப்போது கடந்து கொண்டே தான் வருகிறோம்.

ஆன்லைன் சம்பாத்தியத்தில் கவனம் தேவை

ஆன்லைன் சம்பாத்தியத்தில் கவனம் தேவை

ஆன்லைனில் பணம் சம்பாத்தியம் என்பதில் கவனம் என்பது மிக முக்கியம். சதுரங்க வேட்டை படம் பார்த்திருப்போம் அதில் உள்ள ஒரு வசனம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒருத்தன ஏமாற்றனும்னு முடிவு பண்ணிட்டா முதல்ல அவன் ஆசைய தூண்டனும். இந்த வசனத்தையே கொள்கையாக கொண்டு பலரும் காய்நகர்த்துகிறார்கள்.

ஆன்லைன் மோசடி என்றால் என்ன

ஆன்லைன் மோசடி என்றால் என்ன

அது என்ன ஆன்லைன் மோசடி என்று கேள்வி வரலாம். பணம் கையில் வழங்காமல் ஆன்லைன் மூலம் நடக்கும் அனைத்தும் ஆன்லைன் மோசடி தான். சார் நாங்க மெயின் பிரான்ச்ல இருந்து பேசுறோம் உங்க கார்டு மேலே இருக்க நம்பர் சொல்லுங்கோ என்று ஒரு கால் வந்திருக்கும் அல்லது இதுபோன்ற கால் வந்ததை கேள்வி பட்டிருப்போம்.

லாவகமாக பணம் திருடும் கும்பல்

லாவகமாக பணம் திருடும் கும்பல்

இதன்மூலம் அப்படியே விவரம் தெரியாதவர்களிடம் ஓடிபி வரைக்கும் வாங்கி மொத்த பணத்தையும் எடுத்துவிடுவார்கள். அதேபோல் வங்கி அக்கவுண்ட் ஹேக் செய்து பணத்தை நமக்கே தெரியாமல் ஹேக்கர்கள் திருடுவார்கள். அதுமட்டுமின்றி முகம் தெரியாத நபர்கள் கால் செய்து வெளிநாட்டு வேலை, பயிற்சி மையம் என பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி லாவகமாக தங்களின் பணத்தை திருடுவார்கள்.

சைபர் பிரிவு போலீஸாரே விசாரிப்பார்கள்

சைபர் பிரிவு போலீஸாரே விசாரிப்பார்கள்

இது அனைத்தும் புகாராக பதியும் பட்சத்தில் சைபர் பிரிவில் தான் சேரும். அதேபோல் தான இங்கு ஒரு நபர் ஆசை வார்த்தை கூறி வாட்ஸ் ஆப் ஒரு குரூப்-ல் இருந்து லட்சக் கணக்கில் பணம் பார்த்துள்ளார். இந்த செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

புரோகிதர் பணி செய்பவர் மணிகண்டன்

புரோகிதர் பணி செய்பவர் மணிகண்டன்

சேலம் காடையாம்பட்டியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் புரோகிதர் பணி செய்து வந்தார். இவர் தன் தொழிலைச் சார்ந்து லாவகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழு ஒன்று ஆரம்பித்துள்ளார். அந்த குழுவில் அர்ச்சனை செய்வது குறித்து பாடம் கற்றுத் தருவதாகவும். அதற்கு முறையான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் தருவதாக ரூ.55,000

சான்றிதழ் தருவதாக ரூ.55,000

இவரது ஆசை வார்த்தையை நம்பி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கிறார். ஆனால் மணிகண்டன் முருகேசனுக்கு பல மாதங்களாக சான்றிதழ் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து முருகேசன் மணிகண்டனை நேரில் சென்று கேட்டுள்ளார்.

புரோகிதர் மீது காவல்நிலையத்தில் புகார்

புரோகிதர் மீது காவல்நிலையத்தில் புகார்

அப்போது மணிகண்டன் சான்றிதழ் தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் மணிகண்டனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பல இளைஞரிடம் லட்சக் கணக்கில் மோசடி

பல இளைஞரிடம் லட்சக் கணக்கில் மோசடி

அப்போது தான் மணிகண்டன் இதேபோல் கூறி பல இளைஞர்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகம் தெரியாத நபரிடம் எந்த ஒரு விஷயத்துக்காகவும் தங்களின் விவரங்களையோ அல்லது பணத்தை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Don't do this whatsapp mistakes right now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X