அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?

|

நாடு முழுவதும் புயல் வேகத்தில் அறிமுகமாகி வரும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ட்ரூ 5ஜி சேவைகளானது (True 5G Services ) தமிழ்நாட்டை சேர்ந்த திருப்பூர் (Tiruppur) நகரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

திருப்பூர் உட்பட வேறு எந்தெந்த நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

அந்தந்த நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் ஜியோவின் இலவச வெல்கம் ஆபரை (Jio Welcome Offer) பெறுவது எப்படி?

ஜியோ 5ஜி-க்கும் ஏர்டெல் 5ஜி-க்கும் (Airtel 5G) என்ன வித்தியாசம்? இதோ விவரங்கள்:

எந்தெந்த நகரங்களில் ஜியோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

எந்தெந்த நகரங்களில் ஜியோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

நேற்று, அதாவது ஜனவரி 17 ஆம் தேதியன்று இந்தியாவின் ஏழு மாநிலங்களில் உள்ள 16 நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகமானது.

அவைகள் திருப்பூர், காக்கிநாடா, கர்னூல், சில்சார், தாவனகர், ஷிவமொகா, ஹோஸ்பெட், பிதார், கடக்-பேட்டகேரி, மலப்புரம், பாலக்காடு, கண்ணூர், கோட்டயம், நிஜாமாபாத், பரேலி மற்றும் கம்மம் ஆகும்.

மேலே உள்ள பெரும்பாலான நகரங்களில் 5ஜி-ஐ அறிமுகம் செய்யும் முதல் டெலிகாம் நிறுவனம் என்கிற பெருமையையும் ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

திருப்பூரில் உள்ள மக்கள் ஜியோ வெல்கம் ஆபரை பெறுவது எப்படி?

திருப்பூரில் உள்ள மக்கள் ஜியோ வெல்கம் ஆபரை பெறுவது எப்படி?

திருப்பூர் உட்பட மேலே பட்டியலிடப்பட்டுள்ள 16 நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவருமே ஜியோவின் இலவச வெல்கம் ஆபருக்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். ஆனால் எல்லோருமே வெல்கம் ஆபரை பெற முடியாது.

முதலில் நீங்கள் வெல்கம் ஆபருக்காக பதிவு செய்ய வேண்டும். அதற்கு உங்களிடம் மைஜியோ ஆப் (MyJio App) இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆப் உங்களிடம் இல்லையென்றால் கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) சென்று மைஜியோ ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்.

பின்னர் உங்கள் ஜியோ எண்ணை (Jio Number) பயன்படுத்தி மைஜியோ ஆப்பிற்குள் லாக்-இன் (Log-in) செய்யவும். பின்னர் ஆப்பின் மெயின் பேஜிற்கு (Main Page) செல்லவும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

மைஜியோ ஆப்பின் மெயின் பேஜிற்கு சென்றதும், அங்கே ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆபர் பற்றிய விவரங்களையும், அதற்கு எவ்வாறு தகுதி பெறுவது என்பதற்கான வழிமுறைகளையும் காண்பீர்கள்.

அந்த வழிமுறைகளை பின்பற்றி வெல்கம் ஆபருக்கு பதிவு செய்யவும். நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, அது தொடர்பான டெக்ஸ்ட் மெசேஜ் உங்களுக்கு கிடைக்கும்.

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

ரிஜிஸ்டர் செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

ரிஜிஸ்டர் செய்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

காத்திருக்க வேண்டும்! ஜியோவின் இந்த வெல்கம் ஆபருக்கு நீங்கள் தகுதி பெற ஒரு வாரம் கூட ஆகலாம்.

எல்லாவற்றை விடவும் முக்கியமான 2 விஷயங்கள் என்னவென்றால் - நீங்கள் ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்த வேண்டும் மற்றும் ஜியோவின் இந்த வெல்கம் ஆபர் ஆனது நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

அதனை தொடர்ந்தே நீங்கள் ஜியோவின் வெல்கம் ஆபரை பயன்படுத்துமாறு அழைக்கப்படுவீர்கள். அதன் பின்னர் 1 ஜிபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்!

ஜியோ 5ஜி-க்கும் ஏர்டெல் 5ஜிக்கும் என்ன வித்தியாசம்?

ஜியோ 5ஜி-க்கும் ஏர்டெல் 5ஜிக்கும் என்ன வித்தியாசம்?

தற்போது வரையிலாக, ​​இந்தியாவில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இரண்டு மட்டுமே (அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல்) 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ளன.

ஒப்பிடும் போது ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கை விட ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஏனென்றால் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது ஸ்டேண்ட்அலோன் கட்டமைப்பை (Standalone architecture) அடிப்படையாகக் கொண்டது.

அதுமட்டுமின்றி, ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது, ​​ஜியோவின் 5ஜி நெட்வொர்க் ஆனது அதிக பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது மற்றும் மற்றும் குறைந்த தாமதத்தையும் (Lower latency) வழங்குகிறது!

Best Mobiles in India

English summary
Are you in Tiruppur Jio Introduced Its True 5G Services In Your City How to Get Free Welcome Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X