தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் Samsung போன்களில் மட்டுமே கிடைக்கும்!

|

நீங்களொரு சாம்சங் ஸ்மார்ட்போன் யூசர் என்றால்.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

ஏனென்றால், சாம்சங் மாடல்களில் உள்ள போன் செட்டிங்ஸில் (Samsung Phone Settings) மட்டுமே அணுக கிடைக்கும் 5 அம்சங்களை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்!

அடிச்சுக்கவே முடியாத யூசர் இன்டர்பேஸ்!

அடிச்சுக்கவே முடியாத யூசர் இன்டர்பேஸ்!

ஒருமுறை சாம்சங் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திவிட்டால் போதும், ஒவ்வொரு முறையும் சாம்சங் ஸ்மார்ட்போன்களையே வாங்கும் வாடிக்க்கையாளர்கள் இங்கே அதிகம்.

ஏனென்றால் சாம்சங் மொபைல் போன்களில் இருக்கும் யூசர் இன்டர்பேஸ் (User Interface) அப்படி! தற்போது அந்த யூசர் இன்டர்பேஸ் ஆனது வேறொரு கட்டத்திற்கு செல்கிறது. அதற்கு சாம்சங் நிறுவனத்தின் ஒன் யூஐ 5 அப்டேட்டிற்கு (One UI 5 Update) நன்றி!

சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!

சாம்சங் போன்களில் மட்டுமே கிடைக்கும் 5 அம்சங்கள்!

சாம்சங் போன்களில் மட்டுமே கிடைக்கும் 5 அம்சங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஆன ஒன் யூஐ 5 ஆனது சாம்சங் ஸ்மார்ட்போன்களின் போன் செட்டிங்ஸ்-ல் மட்டுமே அணுக கிடைக்கும் சில பிரத்யேக அம்சங்களை கொண்டு வருகிறது!

அப்படியாக சாம்சங் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அணுக கிடைக்கும் 5 அம்சங்களை பற்றி முதலில் பார்ப்போம். பின்னர் லேட்டஸ்ட் ஒன் யூஐ 5 அப்டேட் ஆனது எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

01.  டெக்ஸ்ட் எக்ஸ்ட்ராக்ஷன்

01. டெக்ஸ்ட் எக்ஸ்ட்ராக்ஷன்

சாம்சங் நிறுவனத்தின் One UI 5 ஆனது, ஒரு புகைப்படத்தில் இருந்து டெக்ஸ்ட்-ஐ பிரித்தெடுக்கும் திறனை கொண்டுள்ளது.அதாவது நீங்கள் கேலரி ஆப்பை திறக்கும்போது, ​டெக்ஸ்ட் உடன் கூடிய படம் தோன்றும் போது, ​​​​ஒரு 'T' ஐகானும் ஸ்க்ரீனில் தோன்றும்.

அந்த ஐகானை அழுத்துவதன் மூலம், அந்த படத்தில் உள்ள டெக்ஸ்ட் ஹை லைட் செய்யப்படும். அதன் பிறகு, உங்களுக்கு தேவைகள் இருந்தால் அந்த டெக்ஸ்ட்-ஐ நீங்கள் காப்பி-பேஸ்ட் செய்யலாம்!

எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!எழுதி வச்சிக்கோங்க.. இந்த 3 பட்ஜெட் Phone-களும் பட்டித்தொட்டி எங்கும் பிச்சிக்க போகுது!

02. லாக் ஸ்க்ரீன் கஸ்டமைசேஷன்:

02. லாக் ஸ்க்ரீன் கஸ்டமைசேஷன்:

இனிமேல் (அதாவது ஒன் யூஐ 5 வழியாக) நீங்கள் உங்கள் விருப்பப்படி லாக் ஸ்க்ரீனை கஸ்டமைஸ் செய்யலாம். இது உங்களுக்கு பலவிதமான வால்பேப்பர் டைப்ஸ் மற்றும் கிளாக் விட்ஜெட் டிசைன்களை வழங்கும்.

அதோடு ஒரு காண்டாக்ட் தொடர்பான இன்ஃபர்மேஷனையும் கூட ஸ்க்ரீனில் ஆட் செய்ய முடியும். மேலும் ஆப்களுக்கான ஷார்ட்கட்களையும் உருவாக்க முடியும். இது தவிர, டிஜிட்டல் கிளாக் விட்ஜெட்டுகளுக்கான கஷ்டம் ஃபான்ட்களையும் கூட நீங்கள் தேர்வு செய்யலாம்.

03. மல்டி டாஸ்கிங் கெஸ்சர்

03. மல்டி டாஸ்கிங் கெஸ்சர்

சாம்சங் நிறுவனத்தின் One UI 5 மூலம், Galaxy ஸ்மார்ட்போன்களின் மல்டி டாஸ்கிங் திறன் வேறொரு கட்டத்திற்கு செல்கிறது என்றே கூறலாம்!

மல்டி டாஸ்கிங் கெஸ்சர் (Multi-tasking Gesture) என்கிற புதிய அம்சத்தின் கீழ், நீங்கள் இரண்டு சைகைகளை பெறுவீர்கள்: பாப்-அப் வியூ-வை பெற ஸ்வைப் செய்வது மற்றும் ஸ்பிலிட் ஸ்க்ரீனுக்காக ஸ்வைப் செய்வது.

முதல் சைகையானது (Gesture), ஒரு ஆப்பை விண்டோ மோட்-இல் திறக்க அனுமதிக்கும்; இரண்டாவது சைகையானது, இரண்டு விரல்களால் ஸ்வைப்-அப் செய்ய உடனே ஸ்பிளிட் ஸ்கிரீன் மோட்-டிற்கு உங்களை அழைத்து செல்லும்!

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

04. கஸ்டம் கால் பேக்கிரவுண்ட்

04. கஸ்டம் கால் பேக்கிரவுண்ட்

இப்போது சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்களால், ஒவ்வொரு ஆப்களுக்குமான வெவ்வேறு கால் பேக்கிரவுண்டை செட் செய்ய முடியும். இது ஒன் யூஐ 5 அப்டேட்டின் மிகவும் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு காண்டாக்ட்டிற்கும் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து, அதை கால் பேக்கிரவுண்ட் ஆகக்கூட செட் செய்ய முடியும்!

05. மல்டி யூசர் சப்போர்ட்

05. மல்டி யூசர் சப்போர்ட்

சாம்சங் நிறுவனம் அதன் ஒன் யூஐ 5 வழியாக, அதன் பயனர்களுக்கு Multi User Support என்கிற அம்சத்தை வழங்குகிறது. முன்னதாக பீட்டா அப்டேட்டில் மட்டுமே கிடைக்கப்பெற்ற இந்த அம்சம், தற்போது ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வந்துள்ளது.

இந்த அம்சம் ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு பயனர்களுக்கான பெர்சனல் அக்கவுண்ட்களை அமைக்க உதவுகிறது. அதாவது உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உங்களுக்காக ஒரு பெர்சனல் அக்கவுண்ட்-ஐ உருவாக்கலாம், அதே போல உங்கள் குடும்பத்தினருக்கான ஒரு பெர்சனல் அக்கவுண்ட்-ஐயும் உருவாக்கலாம்!

சரி வாருங்கள்.. இப்போது எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது ஒன் யூஐ 5 அப்டேட் கிடைக்கும் என்று பார்ப்போம்:

வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?வச்சிட்டாங்க ஆப்பு! 2023 முதல் Samsung, Sony, LG உட்பட பல டிவிகளுக்கு தடை! என்ன காரணம்?

நவம்பர் 2022-இல்...

நவம்பர் 2022-இல்...

கேலக்ஸி Z Fold 4, Z Flip 4
கேலக்ஸி Z Fold 3, Z Fold 3
கேலக்ஸி S21 series (barring கேலக்ஸி S21 FE)
கேலக்ஸி Note S20 series
கேலக்ஸி S20 series
கேலக்ஸி A53 5G
கேலக்ஸி A33 5G
கேலக்ஸி A Quantum 3
கேலக்ஸி Tab S8 series
கேலக்ஸி Tab S7 series

டிசம்பர் 2022-இல்...

டிசம்பர் 2022-இல்...

கேலக்ஸி Z Fold 2
கேலக்ஸி Z Flip 5G, Z Flip
கேலக்ஸி S20 FE
கேலக்ஸி A52s 5G
கேலக்ஸி A51 5G
கேலக்ஸி A42 5G
கேலக்ஸி A32
கேலக்ஸி A Quantum, Quantum 2
கேலக்ஸி Jump, Jump 2
கேலக்ஸி Tab S7 FE, Tab S7 FE 5G
கேலக்ஸி Tab S6 Lite

ஜனவரி 2023-இல்...

ஜனவரி 2023-இல்...

கேலக்ஸி A23
கேலக்ஸி A13
கேலக்ஸி M12
கேலக்ஸி Xcover 5
கேலக்ஸி Buddy, Buddy 2
கேலக்ஸி Wide 5, Wide 6
கேலக்ஸி Tab A8
கேலக்ஸி Tab A7 Lite
கேலக்ஸி Tab Active 3

கடைசியாக பிப்ரவரி 2023-இல் கேலக்ஸி Tab Active 4 Pro ஸ்மார்ட்போனிற்கு ஒன் யூஐ 5 அப்டேட் வந்து சேரும்!

Best Mobiles in India

English summary
5 special features only Samsung phone users can access in their mobile settings thanks to One UI 5

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X