இத எதிர்பார்க்கல.. Pro சிப்செட், 200MP கேமரா, 9000mAh பேட்டரி உடன் இன்னொரு புது OnePlus போன்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய 2026 மினி ஸ்மார்ட்போன் (காம்பாக்ட் ஸ்மார்ட்போன்) மீதான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே எக்கச்சக்கமாக உள்ளது. அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனாகும். ஏனென்றால் ஒன்பிளஸ் 15டி மாடலில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள் எல்லாமே தாறுமாறாக உள்ளன. இன்னும் வெளியீட்டு தேதி மற்றும் விலை நிர்ணயம் தான் பாக்கி உள்ளன!
இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2026 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் வெளியாகி உள்ளன. அது ஒன்பிளஸ் 16 (OnePlus 16) மாடல் ஆகும். நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள தகவலின் படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் குவால்காமின் அடுத்த ஃபிளாக்ஷிப் சிப் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ (Snapdragon 8 Elite Gen 6 Pro) கொண்டு இயங்கக்கூடும்.

சில அறிக்கைகள் குவால்காம் நிறுவனமானது இந்த ஆண்டு இரண்டு வெர்ஷன் களை வெளியிடக்கூடும் என்று கூறுகின்றன: ஸ்டாண்டர்ட்ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட். இதில் ப்ரோ வெர்ஷன் ஆனது 2என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்படுவதாகவும், க்ளாக்டு ஸ்பீடை சுமார் 5GHz ஆக உயர்த்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது
குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்களை ஆரம்பத்திலேயே பயன்படுத்திய நிறுவனங்களின் பட்டியலில் ஒன்பிளஸ் இருப்பது வழக்கம் தான். உதாரணமாக, தற்போதைய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய லீக் உண்மையாகும் பட்சத்தில் குவால்காமின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் சிப்செட்டை முதலில் பெறும் ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 16 மாடலும் இருக்கு.
சிப்செட்டில் மட்டுமன்றி கேமரா ஹார்ட்வேரிலும் ஒரு பெரிய மாற்றம் துதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் ஆனது 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1/1.56-இன்ச் சென்சாரை அடிப்படையாக கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ள 50MP டெலிஃபோட்டோ சென்சார் உடன் ஒப்பிடும் போது இதுவொரு நல்ல அப்கிரேட் ஆகும்.
ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சில முந்தைய லீக்ஸ், ஒன்பிளஸ் 16 ஆனது 9000mAh பேட்டரியை நெருங்கி வருவதாகவும், 200Hz க்கும் அதிகமான ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளன. இந்த "நம்பர்ஸ்" ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்கு "வழக்கத்திற்கு மாறாக" அதிகமாகும். எனவே இவைகளை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 2 பெர்பார்மென்ஸ் கோர்கள் மற்றும் 6 எபிஷியன்ஸி கோர்களை கொண்டுள்ளது. மேலும் 4.608ஜிகாஹெர்ட்ஸ் பீக் கிளாக் ஸ்பீடையும் வழங்குகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் அல்ட்ரா பிளஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








