Home
Mobile

மார்க்கெட்டின் புது கேமரா கிங்.. ரூ.19999 Photography Kit Pro இலவசம்.. Xiaomi-யின் 200MP Leica கேமரா போன்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் புதிய கேமரா-ஃபோகஸ்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) மாடல் ஆகும். என்ன விலை? என்னென்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைப்பர்ஓஎஸ்3 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.9-இன்ச் ஷாவ்மீ ஹைப்பர்ஆர்பிஜி (Xiaomi HyperRGB) ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

Xiaomi-யின் 200MP Leica கேமரா போன் அறிமுகம்!

இந்த டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 300ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட், 3500 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், DCI-P3 கலர் கேமட், HDR+ கன்டென்ட் ஆதரவு, Dolby Vision மற்றும் Xiaomi Shield Glass 3.0 பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

சுவாரசியமாக ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் Wet Touch தொழில்நுட்பமும் உள்ளது, இது பயனர்கள் நனைந்த அல்லது ஈரமான விரல்களால் ஸ்மார்ட்போனை இயக்க அனுமதிக்கிறது. மேலும் இது TÜV Rheinland Low Blue Light, Flicker Free மற்றும் Circadian Friendly சான்றிதழ்களுடனும் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் 3 என்எம் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்குகிறது. இது 16GB LPDDR5x ரேம், 512GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ், ஒரு Adreno GPU மற்றும் Qualcomm AI எஞ்சினையும் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது Leica-வால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. அகில் 50-மெகாபிக்சல் (f/1.67) ப்ரைமரி கேமரா உள்ளது. இது 1-இன்ச் லைட் ஃப்யூஷன் 1050L சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 23மிமீ போக்கால் லெங்த்தை கொண்டது.

இதோடு 1/1.4-இன்ச் சாம்சங் HPE சென்சார், OIS, f/2.39 முதல் f/2.96 அபெர்க்ஷர் மற்றும் 120x வரை டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. கடைசியாக 115-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 1/2.75-இன்ச் சாம்சங் JN5 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா உள்ளது. இதில் 1/2.87-இன்ச் OV50M சென்சார் மற்றும் 90-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உள்ளது. ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ரியர் கேமராக்கள் 8K/30 fps இல் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. இந்த போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் AI ஃபேஸ் லாக் ஆதரவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இது 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 6, NFC, GPS, கலிலியோ, GLONASS, BeiDou, QZSS மற்றும் NavIC ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை, சலுகைகள் மற்றும் விற்பனை தேதி: இந்தியாவில் ஷாவ்மீ 17 அல்ட்ராவின் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாங்கும் போது எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுடன் ரூ.10,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி மார்ச் 17 ஆம் தேதி முடிவடையும் ஆரம்ப விற்பனை காலத்தில், ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 19,999 மதிப்புள்ள ஷாவ்மீ ப்ரொபெஷனல் போட்டோகிராஃபி கிட் ப்ரோவை (Xiaomi Professional Photography Kit Pro) இலவசமாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மீயின் இந்த புதிய போன் மார்ச் 18 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் ஷாவ்மீ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2 கலர்களில் வாங்க கிடைக்கும்: பிளாக் மற்றும் ஒயிட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 Ultra Launched in India Free Rs 19999 Professional Photography Kit Pro Offer Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X