Home
Mobile

உலகையே மிரள விட போகும் புது Motorola போன்.. 50எம்பி கேமரா.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ரேஸர் 70 (Motorola Razr 70) மாடல் சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் XT2657-2 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் சீனாவில் அறிமுகமாகும். சீனாவில் வெளியான சில நாட்களில் இந்த போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா ரேஸர் 70 அம்சங்கள் Motorola Razr 70 Specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 70 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 1080 x 2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

உலகையே மிரள விட போகும் புது Motorola போன்.. எந்த மாடல்?

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 3.63-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளே ஆனது 1056 x 1066 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7400எக்ஸ் (MediaTek Dimensity 7400X) சிப்செட் வசதி மோட்டோரோலா ரேஸர் 70 போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 18ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் மோட்டோரோலா ரேஸர் 70 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் எடை 188 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோரோலா ரேஸர் 70 போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

மோட்டோரோலா ரேஸர் 70 போன் 4500mAh பேட்டரி வசதி உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனம் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா ரேஸர் 70 போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் இந்த மாதம் இறுதியில் அல்லது வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த மோட்டோரோலா ரேஸர் 70 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த மோட்டோரோலா போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 70 spotted on 3C certification site: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X