இதுக்கு தானே காத்து கிடந்தோம்.. Apple-க்கு அடி சறுக்கல்.. ரூ.18000 விலை குறைந்த iPhone.. எந்த மாடல்?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஐபோன் 17இ (iPhone 17e) மாடலை அறிமுகம் செய்து, அதன் ஐபோன் 17 சீரிஸை "முழுமைப்படுத்திய" வேகத்தில் பழைய ஐபோன் 16 சீரீஸில் (iPhone 16 Series) உள்ள மாடல்களின் விலைகள் அவ்வப்போது நல்ல விலை குறைப்புகளை (Price Drop) காணுகின்றன.
அப்படியாக இப்போது விஜய் சேல்ஸ் (Vijay Sales) வழியாக ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடல் ஆனது தவிர்க்க முடியாத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஐபோன் 16 பிளஸின் அசல் அறிமுக விலை என்ன? விஜய் சேல்ஸ்-ல் கிடைக்கும் ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

விஜய் சேல்ஸ் ஐபோன் 16 பிளஸ் ஆபர்: நினைவூட்டும் வண்ணம், ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.89,900 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது விஜய் சேல்ஸ்-ல் இந்த மாடல் ரூ.71,890 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, அதாவது அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது ஏற்கனவே ரூ.18,000 க்கும் மேலான நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.
இந்த் விலைக்குறைப்புக்கு மேலாக, வாடிக்கையாளர்கள் சில வங்கி சலுகைகளையும் பயன்படுத்தலாம். அதன் வழியாக ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலையை மேலும் குறைக்கலாம். சில எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகள் ரூ.3,500 வரை கூடுதல் தள்ளுபடியை வழங்குகின்றன, அதே நேரத்தில் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ வழியாக சுமார் ரூ.3,000 தள்ளுபடியை பெறலாம்.
மேற்கண்ட சலுகைகளை பயன்படுத்திய பிறகு, உங்களுடைய பேமண்ட் ஆப்ஷனை பொறுத்து ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலையை சுமார் ரூ.68,000 க்கு அருகில் கொண்டு வரலாம். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் முடிந்த வேகத்தில் விஜய் சேல்ஸ்-ஐ அணுகவும். ஏனென்றால் இதுபோன்ற சலுகைகள் பொதுவாக நீண்ட காலம் நீடிக்காது. புதிய ஐபோன் மாடல்கள் வந்தவுடன் ஸ்டாக்களை "ஒழித்துக்கட்ட" ரீடெயில் விற்பனையாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு இத்தகைய தள்ளுபடிகளை அறிவிப்பது - வழக்கம் தான்.
இந்தியாவில் ஐபோன் 17இ மாடலின் விலை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 17இ மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபோன் 17இ மாடலின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவுடன் வருமாம் ஐபோன் 17இ மாடலானது ஐஓஎஸ் 26 கொண்டு இயங்குகிறது. இது ஐபோன் 16இ மாடலை போன்ற அதே 60ஹெர்ட்ஸ் 6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ட்ரூ டோன் மற்றும் 800 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ19 சிப் மூலம் இயங்குகிறது. இது 8ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது மற்றும் இது 256ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள இந்த மாடல் ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலானது எப்/1.6 அபெர்க்ஷர் உடனான 48 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ளதை போலவே தெரிகிறது. இதனால் 24 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் படங்களை எடுக்க முடியும், மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனையும் ஆதரிக்கிறது.
கூடவே ஐபோன் 17இ மாடல் ஆனது "ஆப்டிகல் குவாலிட்டி" 2எக்ஸ் ஜூமையும் ஆதரிக்கிறது. இது 12 மெகாபிக்சல் படங்களை வழங்க இன்-சென்சார் க்ராப்பை பயன்படுத்துவதாக ஆப்பிள் கூறுகிறது. முன்பக்கத்தில், இது எப்/1.9 அபெர்க்ஷர் உடனான 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் செல்பீ கேமரா உள்ளது கடைசியாக இது மேக்சேப்-க்கான ஆதரவு உடன் வருகிறது. 20W சார்ஜர் (வயர்டு) மற்றும் 7.5W மேக்சேப் (வயர்லெஸ்) சார்ஜிங்கை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








