போனை விரைவில் சார்ஜ் செய்வதற்கான வழிமுறைகள்

Posted By: Staff
போனை விரைவில் சார்ஜ் செய்வதற்கான வழிமுறைகள்

தமிழ்நாட்டிலுள்ள மின்பற்றாக்குறைகளில் மிகவும் முக்கியமானது, செல் போனுக்கு கூட சார்ஜ் செய்யமுடியவில்லை என்பதே. அதையும் தாண்டி, பிசினஸ் செய்பவர்களும், மாணவ மாணவிகளுக்கும் இன்றியமையாதது செல் போன் மற்றும் செல் போன் சார்ஜ்.

சில போன்கள் பாதியிலேயே பேட்டெரி முடிந்துவிடும். இந்த பிரச்சனைகளால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். அவற்றை தடுக்க தமிழ் GizBot சில வழிமுறைகளை வழங்குகிறது. இவற்றை பின்பற்றினால் செல் போனை விரைவில் சார்ஜ் செய்யமுடியும்.

வழிமுறைகளாவன:

  • உங்கள் போன் சார்ஜரை நேரடியாக அவுட்லெடில் இணைக்கவும். இந்தமுறை கம்ப்யூட்டர் மற்றும் காரில் சார்ஜாவதைவிட வேகமாக இருக்கும்.

  • சார்ஜ் செய்யும்பொழுது தேவையில்லாத எல்லா அப்ப்ளிகேசன்களையும் நிறுத்திவிடவேண்டும். GPS மற்றும் ப்ளுடூத் போன்றவற்றையும் மூடிவிட வேண்டும்.

  • செல்போனின் திரையை அனைத்துவிடுவதும் நல்லது. பெரும்பாலான போன்கள் பயன்படுத்தாத பொழுது ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும். அப்படியில்லையெனில் நீங்களே திரையை அனைத்துவிடுங்களேன்.

  • உங்கள் போன் வைப்ரேட் மோடில் இருந்தால், உடனே அதை நார்மல் மோடுக்கு மாற்றுங்கள். நார்மல் மோட் குறைந்த அளவு பேட்டரியயே பயன்படுத்தும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot