50எம்பி கேமராவுடன் அறிமுகமான Xiaomi ஸ்மார்ட் கிளாஸ்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

|

கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் ஸ்மார்ட் கிளாஸ் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்திருந்தது. தற்போது கேமரா, டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி.

மிஜியா ஸ்மார்ட் கிளாஸ்

மிஜியா ஸ்மார்ட் கிளாஸ்

தற்போது இந்த மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் கண்ணாடி அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம்

ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம்

குறிப்பாக மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் ஆனது இண்டெலிஜண்ட் இமேஜ் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த கண்ணாடியின் இருபுறமும் ஏ.ஆர் ஆப்டிக்கல் டிஸ்பிளே, கேமரா மாட்யுல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக லென்ஸ் மற்றும் ஃபிரேம்கள் இந்த கண்ணாடியின் முழு பயன்பாடுகளை அனுபவிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு
இந்த ஸ்மார்ட் கிளாஸ் எடை 100 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

அதேபோல் இந்த சாதனம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட் கிளாஸ் ஆனது சோனி மைக்ரோ ஒஎல்இடி சிலிகான் சார்ந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. எனவே இது உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்.

அட்ராசக்கை! கம்மி விலை முதல் பெஸ்டான போன் வாங்கலாமா? புது Vivo போன் வாங்க சரியான நேரம்!அட்ராசக்கை! கம்மி விலை முதல் பெஸ்டான போன் வாங்கலாமா? புது Vivo போன் வாங்க சரியான நேரம்!

ஸ்னாப்டிராகன் பிராசஸர்

ஸ்னாப்டிராகன் பிராசஸர்

மேலும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆண்டி-புளூ லைட் சான்று, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மிஜியா ஸ்மார்ட் கிளாஸ். குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த
சியோமி ஸ்மார்ட் கிளாஸ்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

தரமான கேமரா

தரமான கேமரா

சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி டெலிபோட்டோ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு இதில் உள்ள ஏ.ஆர்.மூலம் ரியல்-டைம் மொழி பெயர்ப்பு வசதியும்உள்ளது.

64எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரியுடன் களமிறங்கும் புதிய Redmi போன்: எப்போது அறிமுகம்?64எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரியுடன் களமிறங்கும் புதிய Redmi போன்: எப்போது அறிமுகம்?

 அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் ஆனது 1020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதை 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.

ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபை, இண்டிபென்டெண்ட் ஐஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த மிஜியா ஸ்மார்ட் கிளாஸ்.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை

சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மிஜியா ஸ்மார்ட் கிளாஸ் விலை CNY 2499 (இந்திய மதிப்பில் ரூ.29,275) ஆக உள்ளது. இதன் கிரவுட்-ஃபண்டிங் விற்பனை ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்குகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட் கிளாஸ் CNY 2699 (இந்திய மதிப்பில் ரூ.31,615) விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சியோமி 12டி எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனும் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!

சியோமி 12டி

சியோமி 12டி

சியோமி 12டி ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்த்த சிப்செட் வசதி உள்ளது என்றே கூறலாம். அதாவது இந்த போன் மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பல வசதிகளுக்கு இந்த சிப்செட் Dimensity 8100 சிப்செட் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். அதேபோல் இந்த புதிய சியோமி போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான கேமரா

அருமையான கேமரா

சிப்செட்-ஐ விட இதன் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். அதாவது இந்த சியோமி 12டி போன் 108எம்பி Samsung ISOCELL HM6 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போன்

பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் பெரிய டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சியோமி 12டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Smart glasses with 50MP camera launched Check Price Specifications Sale Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X