Home
Gadgets

நாளை விற்பனைக்கு வரும் புதிய Xiaomi 4K டிவிகள்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 (Xiaomi TV S Mini LED Series 2026) மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த புதிய டிவிகள் நாளை முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அமேசான், எம்ஐ.காம் போன்ற தளங்களில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும். தற்போது இந்த டிவிகளை முன்பதிவு செய்ய முடியும். இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் என மூன்று அளவுகளில் இந்த புதிய சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Xiaomi 4K டிவிகள்.. எந்த மாடல்?

சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 அம்சங்கள் (Xiaomi TV S Mini LED Series 2026 specifications): புதிய சியோமி 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் டிவி மாடல்கள் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840×2160 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 178 டிகிரி வியூ ஆங்கிள், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG) போன்ற டிஸ்பிளே அம்சங்களுடன் சியோமி டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.

டால்பி விஷன் (Dolby Vision), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 1200 நிட்ஸ் பிரைட்னஸ், டிம்மிங் சோன் (Dimming Zone) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய சியோமி டிவிகளில் உள்ளன. குறிப்பாக இந்த சியோமி டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்களில் உள்ளது. அதேபோல் ஏஐ கேம் பூஸ்ட் (AI Game Boost) ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளது.

தரமான குவாட் கார்டெக்ஸ் ஏ55 சிபியு (Quad Cortex A55 CPU) பிராசஸர் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் வெளியாகி உள்ளது. மேலும் மாலி ஜி52 எம்சி1 2இஇ எம்சி1 ஜிபியு (Mali-G52 2EE MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி இந்த டிவிகளில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.

அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் இந்த புதிய சியோமி டிவிகள் வெளிவந்துள்ளன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி டிவிகள் இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவிகளில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் ( Hotstar) உள்ளிட்ட உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்தலாம்.

தனித்துவமான டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் கொண்ட 34W ஸ்பீக்கர்கள் உடன் சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Xiaomi 4K டிவிகள்.. எந்த மாடல்?

மேலும் டூயல் பேண்ட் வைஃபை, ஈதர்நெட், ஆப்டிகல் ஆடியோ, 3.5மிமீ ஹெட்போன் ஜாக், புளூடூத் 5.2, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 மாடல்களில் உள்ளன.

சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 விலை

சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 55 இன்ச் மாடலின் விலை ரூ.51,999-ஆக உள்ளது.
சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 65 இன்ச் மாடலின் விலை ரூ.71,999-ஆக உள்ளது.
சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் 2026 75 இன்ச் மாடலின் விலை ரூ.99,999-ஆக உள்ளது.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.10000 வரை தள்ளுபடியும் உள்ளது.

photo credits: mi.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV S Mini LED Series 2026 goes on sale in India for the first time tomorrow: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X