90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!

|

எத்தனை விதமான கேட்ஜெட்கள் வந்தாலும், "90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்" என்று - பொதுவாக எல்லோரும் சொந்தமாக வாங்க ஆசைப்பட்ட ஒரு சாதனம் என்றால், அது அந்த காலத்தில் வாங்க கிடைத்த வாக்மேன் சாதனம் தான்.

டேப் கேசட்டை வாக்மேனில் போட்டு, வயர்டு ஹெட்போன்ஸை வாக்மேனில் சொருகி, அதை தலையில் மாட்டிக்கொண்டு அங்கும்-இங்கும் நடந்து கொண்டே பாடல் கேட்டு ரசிக்கும் சுகமே தனி தான். இன்றைய இளசுகள் இதையெல்லாம் ஸ்மார்ட்போனிலேயே செய்துவிடுகிறார்கள். அதிலும் பெரும்பாலானோர் வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை தான் பயன்படுத்துகிறார்கள்.

90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட் Sony Walkman.! அலறவிடும் விலையில்.!

90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட் Sony Walkman.!

என்ன தான் பல தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும், 'ஓல்ட் இஸ் கோல்டு' என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்டிப்பாக 'ஓல்ட் இஸ் கோல்டு' என்ற வார்த்தைக்கான முழு அர்த்தத்தையும் அனுபவித்தவர்கள் 90's கிட்ஸ்களாக தான் இருக்க முடியும். வாக்மேனில் சில நேரம் கேசட் டேப் சிக்கிக்கொள்ளும், அதை பாதுகாப்பாக வாக்மேனில் இருந்து எடுப்பதே ஒரு பெரும் திறமையாகும்.

அதற்கான பொறுமையும், கேசட்டை பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கான பொறுப்பும் நம்மிடம் இருந்தது. சரி, பிளாஷ் பேக் ஓட்டியது போதும், விஷயத்திற்கு வருவோம். ஆடியோ டிவைஸ் என்றாலே அந்த காலத்தில் இருந்து இன்று வரை தலை சிறந்த நிறுவனமாகச் சோனி (Sony) நிறுவனம் தான் திகழ்கிறது. அத்தகைய நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ள புதிய டிவைஸ் தான் இந்த 'Sony NW-ZX707' Walkman சாதனம்.

90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட் Sony Walkman.! அலறவிடும் விலையில்.!

அடேங்கப்பா.. இந்த Sony வாக்மேனை செதுக்கி-செதுக்கி செஞ்சிருக்காங்களே.!

இது இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய டேப் கேசட் வாக்மேன் போல இல்லாமல், இது ஹை-டெக் தொழில்நுட்பத்துடன், மிகவும் ஸ்லிம்மான டிசைனுடன், டச் வடிவமைப்பை பெற்றுள்ளது. பார்த்ததும் நமது கண்களை இந்த வாக்மேன் கவர்கிறது. உடனே வாங்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. ஆனால், இதன் விலையைப் பார்த்தவுடன் நமக்குத் தோன்றிய ஆசைகள் எல்லாம் பேக்கில் ஓடிவிடுகிறது.

சோனி தயாரிப்பு என்பதானாலோ என்னவோ இதன் விலை நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கிறது. சரி, விலையைப் பற்றி பார்ப்பதற்கு முன், இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்று பார்த்துவிடலாம். Sony India-வின் தகவல் படி, இது S-Master HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது பிரத்தியேகமாக வாக்மேனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது தயாரிப்பின் ஒலி தரத்தை மேம்படுத்துகிறது.

இந்த புது Sony Walkman ஆனது 5' இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது வைஃபை இணக்கத்தன்மை உடன் வருகிறது. இது பயனர்களுக்கு இசையை ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் மற்ற விஷயங்களை டவுன்லோட் செய்யவும் அனுமதிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்புடன் உயர்தர சவுண்ட் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சோனியின் ஒரிஜினல் மியூசிக் பிளேயர் ஆப்ஸை பயன்படுத்தும் போது மட்டுமே இது 25 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது.

90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட் Sony Walkman.! அலறவிடும் விலையில்.!

என்ன சொல்றீங்க பாஸ்.! இதோட 'விலை' இவ்வளவு அதிகமா?

இதில் உள்ள S-Master HX டிஜிட்டல் ஆம்ப் தொழில்நுட்பமானது பரந்த ஃபிரீக்வென்சி வரம்பில் நாய்ஸ் இரைச்சல் மற்றும் லாடென்சியை குறைக்கிறது. இதன் விளைவாக ரிச் தரத்தில் சூப்பர் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ உருவாகிறது. இது மேம்படுத்தப்பட்ட ஃபைன்-டியூன் செய்யப்பட்ட கேப்பாசிட்டர்களுடன் வருகிறது. இதில் ஒரு FTCAP3 மற்றும் அதிக கொள்ளளவு மற்றும் குறைந்த எதிர்ப்பை வழங்கும் கெப்பாசிட்டரும் இதில் உள்ளது.

Sony Walkman ஆனது எட்ஜ்-AI, DSEE அல்டிமேட் (டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நிகழ்நேரத்தில் கம்ப்ரெஸ்ட்டு செய்யப்பட்ட டிஜிட்டல் மியூசிக் பைல்களை மேம்படுத்துகிறது. தற்போது உருவாகி வரும் அல்காரிதம் CD-தரம் (16-பிட் 44.1/48kHz) இழப்பற்ற கோடெக் ஆடியோவிற்கு இன்னும் பெரிய பலன்களை இது வழங்குகிறது. இன்னும் பல அம்சங்களை இந்த சோனி வாக்மேன் கொண்டுள்ளது.

இறுதியாக இந்த Sony NW-ZX707 Wlakman விலை பற்றிப் பார்க்கையில், இது ரூ. 69,990 விலையில் இந்தியாவில் இப்போது வாங்கக் கிடைக்கிறது. இது Headphone Zone தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. பிளாக்ஷிப் ஆடியோ டிவைஸ்களை விற்பனை செய்யும் தளம் தான் இந்த ஹெட்போன்ஸ் ஜோன்.

Best Mobiles in India

English summary
Sony Launched New Sony NW-ZX707 Walkman That Almost Costs Rs 70000 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X