அடி தூள்.! ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவிகள்.! நம்பி வாங்கலாம்.!

|

தற்போது இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இதைப் புரிந்து கொண்டு பல நிறுவனங்கள் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் மேட் இன் இந்தியா ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ், நெக்பேண்ட் இயர்போன் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்து வந்த சென்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி இந்தியாவில் தற்போது 7 மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது சென்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த டிவி அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டிவிகள் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளில் உருவாக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவிகள்.!

SENS நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவிகளில் லுமிசென்ஸ் மற்றும் ஃபுளோரோசென்ஸ் டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவிகள் தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் 32-இன்ச் துவங்கி 65 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த டிவிகளில் கூகுள் ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளதால் நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த டிவிகளில் "கிட்ஸ்" ப்ரோஃபைலை உருவாக்க முடியும்.

அதேபோல் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சென்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மூலம் இந்த ஸ்மார்ட் டிவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த டிவி மாடல்களுக்கு பிரபல ஓவியர்களான டாவின்சி மற்றும் பிகாசோவை தழுவி பெயரிடப்பட்டுள்ளன. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவிகள்.!

சென்ஸ் டாவின்சி 55-இன்ச், 65-இன்ச் 4கே QLED ஸமார்ட் டிவிகள்
சென்ஸ் டாவின்சி 55-இன்ச், 65-இன்ச் 4கே ஸமார்ட் டிவிகள் 3840x2160 பிக்சல்ஸ், QLED டிஸ்ப்ளே ஆதரவுடன் வெளிவந்துள்ளன. பின்பு குவாட்-கோர் பிராசஸர், எச்டிஆர்10 ஆதரவு, டால்பி விஷன், பெசல் லெஸ் டிசைன், கூகுள் டிவி ஓஎஸ், 2ஜிபி ரேம்,16ஜிபி ஸ்டோரேஜ், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.2, டால்பி அட்மோஸ் ஆதவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. பின்பு இதன் 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.42,999-ஆக உள்ளது.

சென்ஸ் பிகாசோ 50-இன்ச்,55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவிகள்
சென்ஸ் பிகாசோ 50-இன்ச், 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிவிகள் 3840x2160 பிக்சல்ஸ் மறறும் எல்இடி டிஸ்பிளே, எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்பு குவாட்-கோர் ஏ53 பிராசஸர், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது. அதேபோல் குறிப்பாக சென்ஸ் பிகாசோ 50-இன்ச் டிவியின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55-இன்ச் மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவிகள்.!

சென்ஸ் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்
சென்ஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி 1366x768 பிக்சல்ஸ் மற்றும் எல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது. அதேபோல் 43-இன்ச இரு விதங்களில் கிடைக்கும். அதாவது 43-இன்ச் ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல்ஸ் மற்றும் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 3840x2160 பிக்சல்ஸ் பெசல் லெஸ் டிசைன் என்கிற இரண்டு விதங்களில் கிடைக்கிறது.

குறிப்பாக 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் குவாட்கோர் ஏ53 பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிக்கல் போர்ட், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 20வாட்ஸ் ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மேலும் 43-இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

photo courtesy:fonearena.com

Best Mobiles in India

English summary
SENS launched 'Made in India' TVs under Rs 10,000 in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X